தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் சார்பட்டா நடிகை!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

Photo of author

By Sakthi

தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் சார்பட்டா நடிகை!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

Sakthi

தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் சார்பட்டா நடிகை!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது திரைப்படமான தலைவர்170 திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தின். பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக அவருடைய 170வது திரைப்படமான தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தலைவர். 170 திரைப்படத்தை இயக்குநர் டி.ஜி. ஞானவேல் அவர்கள் இயக்குகிறார்.

ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்தை தயாரிக்கின்றார். சமீபத்தில் தலைவர் 170 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது.

அதாவது தலைவர் 170 திரைப்படத்தில் இருக்கும் நபர்களை அக்டோபர் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி அக்டோபர் 1ம் தேதி திரைப்படத்தின் இயக்குநர் டி.ஜி ஞானவேல், படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று(அக்டேபர்2) தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கும் நடிகை பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சார்பட்டா பரம்பரை திரைப்படம் முலம் நடிகையாக அறிமுகமான துஷாரா விஜயன் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கவுள்ள படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை துஷாரா விஜயன் நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்க்கன், சமீபத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதை அடுத்து தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது தினைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.