இந்தியா அடுத்து விளையாடவுள்ள ஆஸ்திரேலியா தொடருக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த பயிற்சியின் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கானுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த போட்டியில் இவர் விளையாடுவாரா?
இந்திய அணி நியூசிலாந்து உடன் சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்தது. நடந்த 3 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் தோல்வியடைந்தது. இதற்கு கம்பீர் தலைமை தான் காரனம என்றும் ரோஹித் கேப்டன்ஷிப் சரியில்லை விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்று பல கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் இந்திய அணி நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியா உடன் முதல் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்து தொடரின் தோல்வி காரணமாக இந்த தொடரில் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பயிற்சியின்போது சர்ப்ராஸ் கான் பேட்டிங் செய்யும் போது அவர் பவுன்ஸ் பந்தை எதிர் கொல்லும் போது அவர் முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் போட்டியில் இவர் விளையாட மாட்டார் என்றும் இவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் துருவ் ஜூரல் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.