நிச்சயம் வருவேன் சசிகலா அதிரடி! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

Photo of author

By Sakthi

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்த சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் தீவிரமான அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை தேர்தல் சமயம் என்ற காரணத்தால், அவருடைய அரசியல் பிரவேசம் என்பது மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

ஆனாலும் சிறையிலிருந்து விடுதலையாகி சென்னைக்கு வந்த சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக நினைத்தது நடக்கவில்லை..ஆனாலும் எதிர்க்கட்சியாக வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த சூழ்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சசிகலா உரையாற்றிய ஒரு ஆடியோ வெளியானது. அதில் தொண்டர் ஒருவரிடம் கவலைப்படாமல் இருங்கள் நான் வந்து விடுவேன் அனைத்தையும் சரி செய்து விடுவேன் என்று தெரிவித்திருந்தார். அதேபோல நேற்று முன்தினம் வெளியான ஒரு ஆடியோ விற்பனை செய்த தவறுதான் என்ன செய்ய இயலும் என ஒரு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டரிடம் உரையாற்றியிருந்தார்.சசிகலா அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் உரையாடிய ஆதாரங்கள் எதுவும் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சசிகலா பேசிய நான்காவது ஆடியோ தற்சமயம் வெளியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் சென்னையை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றொருவருடன் சசிகலா உரையாற்றியிருக்கிறார். அவருடன் சசிகலா கவலைப்படாதே நான் நிச்சயம் வருவேன் அனைத்தையும் சரி செய்து விடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்..