தேர்தலில் போட்டியிடும் சசிகலா? ரீதியான முயற்சியில் தீவிரம் காட்டும் டிடிவி!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் மா. சேகர் இவருடைய மகள் ஸ்ருதிக்கு டாக்டர் முருகேசன் உடன் டிடிவி தினகரன் தலைமையில் ஒரத்தநாட்டில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தார்.தேர்தலில் போட்டியிடும் சசிகலா? ரீதியான முயற்சியில் தீவிரம் காட்டும் டிடிவி!

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றார். அவர் தமிழகத்திற்கு வருவது பெரிய விஷயம் இல்லை. அதிமுகவினர் பேசும் வைத்திருக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. அம்மாவின் தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தான் இருக்கிறார்கள்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மட்டும் தான் உண்மையான அணி இதில் மூன்றாவது நான்காவது என்றெல்லாம் கிடையாது என் மீது குற்றம் கண்டு பிடிப்பதற்காகவே ஒரு குழு திரிகின்றது. இதற்கெல்லாம் நான் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. எங்களுடைய இலக்கு அம்மாவுடைய ஆட்சியை கொண்டு வருவதுதான் என்று தெரிவித்திருக்கிறார்.

ஸ்லீப்பர் செல்கள் என்பவர்கள் எங்களுடைய நலன் விரும்பிகள். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்கள் எதிர் வரும் சமயத்தில் வருவார்கள் நாங்கள் நிச்சயமாக அதிமுக என்ற இயக்கத்தை மீட்டெடுப்போம். தமிழக மக்கள் அதற்கான வாய்ப்பை எங்களுக்குக் கொடுப்பார்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் என்பது மிகப் பிரகாசமாக இருக்கிறது. சசிகலாவின் உறவினர்களில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. சுதாகரன், இளவரசி, சொத்தோ இல்லை. அது கம்பெனி சொத்து நீதிமன்றத்தின் உத்தரவு வழியே அனைத்தும் நடக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார்.தேர்தலில் போட்டியிடும் சசிகலா? ரீதியான முயற்சியில் தீவிரம் காட்டும் டிடிவி!

சசிகலா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் அந்த முயற்சிகளில் வெற்றி அடைந்தவுடன் சசிகலா நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவார் என்பது தான் என்னுடைய விருப்பம் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.தேர்தலில் போட்டியிடும் சசிகலா? ரீதியான முயற்சியில் தீவிரம் காட்டும் டிடிவி!

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட கால சிறை தண்டனை சசிகலா அனுபவித்து இருக்கிறார். இதன் காரணமாக சசிகலாவால் ஆறு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட இயலாது. இருந்தாலும் சிக்கிம் மாநிலத்தில் ஊழல் வழக்கில் தண்டனை அடைந்த தமாங் தேர்தலில் போட்டியிட அனுமதித்தது தேர்தல் ஆணையம். இந்த செயலை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பு தேர்தலில் போட்டியிட முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மூத்த நிர்வாகிகள் சிலர் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

Leave a Comment