பொதுச்செயலாளர் வழக்கு! சசிகலாவுக்கு கிடுக்குப்பிடி போட்ட நீதிமன்றம்!

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனைத்தொடர்ந்து தற்போதைய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அதன் பிறகு சசிகலாவின் கட்டாயத்தால் அவர் முதல்வர் பதவியை இழக்க நேர்ந்தது. அதனைத்தொடர்ந்து அவர் தர்மயுத்தத்தில் ஈடுபட்டார். அதனையடுத்து சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார் அதேபோல சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அந்த கட்சியில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின.

அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு அவருடைய பொதுச் செயலாளராக நியமனம் ரத்து செய்யப்பட்டது. கட்சியை வழி நடத்துவதற்காக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பொறுப்புகள் உண்டாக்கப்பட்டன. சசிகலா நியமனம் செய்த துணை பொது செயலாளர் மற்றும் பொதுச்செயலாளர் என்ற நியமனம் செல்லாது என்று அதேபோல சசிகலாவால் நியமனம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதோடு சசிகலாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து சிறையில் இருந்தபடியே அதிமுகவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ரத்து செய்தது மற்றும் ஒருங்கிணைப்பாளர் இனிய ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் ஏற்படுத்தப்பட்டது போன்ற நியமனங்கள் செல்லாது என்று அறிவிக்க கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு பல மாற்றங்கள் ஏதும் இன்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சசிகலா போட்ட இந்த பொதுச்செயலாளர் வழக்கானது அண்மையில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. நான்காவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தபோது இந்த வழக்கை கைவிடுவதாக சென்னை நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனு கொடுத்தார்.

அதோடு இந்த வழக்கில் சசிகலாவின் எண்ணம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு சசிகலாவிடம் ஆலோசனை செய்து விட்டு அதன்பிறகு சொல்வதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த நிலையில், சசிகலா போட்ட வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த சமயத்தில் இந்த மனுவிற்கு பதில் அளிக்க வேண்டும் என்று சசிகலாவிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.

Leave a Comment