சசிகலாவுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்!

Photo of author

By Sakthi

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் தர்மத்தை ஆரம்பித்த சமயத்தில் அதிமுகவின் கட்சித்தொண்டர்கள் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்து இருக்கிறார்கள் என்று தெரிவித்துக் கொண்டு அப்போது அவருக்கு இந்த கட்சியில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அதன் மூலமாக தன்னை தானே பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்டார் சசிகலா.

அதன் பிறகு அதிமுகவின் சட்டசபை கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவும்கூட அப்போது அவர் வசம் இருந்த சட்டசபை உறுப்பினர்களின் தயவால் நடந்தது என்பது வேறு கதை. இந்தநிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர் அந்த கட்சியில் பல மாற்றங்கள் நடந்தன.

அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர் இருந்த சமயத்திலேயே அதிமுகவின் பொதுச்செயலாளர் யாரென்று கட்சித்தொண்டர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் இதற்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று அப்போதே ஒரு நீதியை வகுத்து வைத்திருந்தார் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்.

இந்த நிலையில், சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் கூடி சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு கட்சியை வழி நடத்துவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் உண்டாக்கப்பட்டு சசிகலா நியமனம் செய்த துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அதோடு கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இருந்தாலும் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா என்ற நியமனத்தை ரத்து செய்தது கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணையதளம் என்ற பொறுப்புகள் ஏற்படுத்தியது, கடந்த 2017ஆம் வருடம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் என்று எதையுமே செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என தெரிவித்து சசிகலா சிறையில் இருந்தவாறே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் இந்த வழக்கு சூடுபிடிக்கும் என்று எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

சசிகலாவால் போடப்பட்ட பொதுச்செயலாளர் வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது நான்காவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது இந்த வழக்கை கைவிடுவதாக சென்னை நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனு கொடுத்தார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் ரத்து செய்யக்கோரிய வழக்கில் சசிகலா நிலைப்பாடு என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு சசிகலாவிடம் ஆலோசனை செய்து பின்னர் இதற்கான பதிலை தெரிவிப்பதாக சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், சசிகலாவால் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி விடுமுறையில் இருந்த காரணத்தால், வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.