சசிகலாவின் நிலை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்? தினகரன் தீவிர முயற்சி!

Photo of author

By Sakthi

கர்நாடக மாநிலம் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில், இப்பொழுது நல்ல முன்னேற்றம் இருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்திருக்கிறது .நேற்றைய தினம் அந்த மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், சசிகலாவின் நாடித் துடிப்பானது ஒரு நிமிடத்திற்கு 72 முறை இருக்கின்றது இது அனைவருக்கும் இருக்கும் நார்மல் துடிப்பு தான் என்று சொல்கிறது. அதோடு அவர் சுவாசிக்கும் வேகமானது ஒரு நிமிடத்திற்கு 20 ஆக இருக்கின்றது, சசிகலாவின் உடலில் ஆக்சிஜன் அளவு 97 சதவீதமாக இருந்து வருகிறது. அதோடு சசிகலாவுக்கு 5 லிட்டர் வரையில் ஆக்சிசன் கொடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விக்டோரியா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு சசிகலாவின் தற்போதைய உடல்நிலை நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும், அவர் டாக்ட்டர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை அங்கே இருக்கக்கூடிய மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு டிடிவி தினகரன் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. ஆனாலும் சசிகலாவை மணிப்பால் மருத்துவமனை மாற்றுவதற்கு இதுவரை அனுமதி கொடுத்ததாக தெரியவில்லை என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இருந்தாலும் அவரை அந்த மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை டி டி வி தினகரன் தொடர்ச்சியாக செய்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையா போன்ரோக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்த சமயத்தில்,அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டது இந்த மருத்துவமனையில்தான் என சொல்கிறார்கள் .ஆகவே இந்த மருத்துவமனைக்கு சசிகலாவை மாற்றுவதற்கு டிடிவி தினகரன் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக சொல்கிறார்கள்.