கண்ணீர் விட்ட சசிகலா! பதறிப்போன தொண்டர்கள்!

Photo of author

By Sakthi

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து விடுதலையானார். இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தமிழகம் வந்து சேர்ந்தார். தமிழகம் வருவதற்கு முன்பிருந்தே தமிழகம் பரபரப்பாகி இருந்தது. ஏனென்றால் அவர் தமிழகம் வந்த உடனே முழு நேர அரசியலில் ஈடுபடுவார் அதன் காரணமாக தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்பட்டது.ஆனால் தமிழகம் வந்த சசிகலா வெகுகாலமாக அமைதியாகவே இருந்து வந்தார். அவர் அரசியல் ரீதியாக எந்த ஒரு பணியிலும் ஈடுபடாமல் அவர் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில், திடீரென்று தான் அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை விட்டு எல்லோருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கினார்.

இதனால் அவருடைய தொண்டர்கள் முதல் டிடிவி தினகரன் வரையில் எல்லோரும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இந்த நிலையில் அவர் தனக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கும் காரணத்தால், ஆன்மீக சுற்றுலாவை தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.அந்த விதத்தில், சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தன்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்று அங்கே தன்னுடைய கணவர் சமாதிக்குச் சென்று வணங்கிவிட்டு அதன் பிறகு அங்கே ஒரு சில கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வந்திருக்கிறார் சசிகலா.

அதோடு நான் சிறையில் இருந்த சமயத்தில் நான் வெளியே வரக்கூடாது என்று பல சதிவேலைகள் நடத்தப்பட்டன. ஆனால் கடவுள் என் பக்கம் இருந்த காரணத்தால், அவர்களின் சதி என்னிடம் வேலை செய்யவில்லை. அதன் காரணமாகவே நான் அரசியலிலிருந்து விலகுவதாக முடிவு செய்துவிட்டேன் என்று அவருடைய குடும்பத்தாரிடம் தெரிவித்திருக்கிறார்.அதோடு தான் யாரை நம்பினாலும் அவர்களே எனக்கு எதிரியாக மாறி விடுகிறார்கள். அதன் காரணமாகவே நான் அரசியலில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்தேன் இன்று அவருடைய உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார் சசிகலா.