சசிகலா-வுக்கு முக்கிய பொறுப்பு .. முழு சம்மதம் அளித்த எடப்பாடி!! உண்மையை சொன்ன அதிமுக மாஜி!!

Photo of author

By Rupa

சசிகலா-வுக்கு முக்கிய பொறுப்பு .. முழு சம்மதம் அளித்த எடப்பாடி!! உண்மையை சொன்ன அதிமுக மாஜி!!

Rupa

Sasikala is their leader.. Full consent to Edappadi!! AIADMK ex-maji told the truth!!

ADMK: அதிமுகவை மீண்டும் வலிமை மிகுந்த கட்சியாக கொண்டு வர வேண்டுமென்பதில் தீர்க்கமாக உள்ளது. அதன் பொருட்டு மீண்டும் கட்சிக்குள் ஓபிஎஸ் தினகரன் சசிகலா உள்ளிட்டோரை இணைக்க ஆலோசனை செய்து வருகின்றனர். இது ரீதியாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி-யிடம் பேச்சுவார்த்தையில் உள்ளனர். இப்படி இருக்கையில் தான் மாஜி அமைச்சர் வைகை செல்வன் புதிய தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இவர் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, வரப்போகும் 2026 ஆம் தேர்தலில் கட்டாயம் கட்சியிலிருந்து வெளிநடப்பு செய்தவர்கள் இணைவார்கள். குறிப்பாக சசிகலா தினகரன் உள்ளிட்டோர் இணைய ஆதரவளித்துள்ளனர் எடப்பாடி பழனிச்சாமியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, தான் மட்டும் தான் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம். மேற்கொண்டு சசிகலா கட்சிக்குள் வந்தால் அவைத் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் வலுவிழந்த அதிமுக மீண்டும் வலுப்பெற்று திமுகவை எதிர்க்கவே இந்த கூட்டணியை அமைக்க எடப்பாடி பழனிச்சாமி ஒத்துக் கொண்டுள்ளாராம். அதேபோல சசிகலா தரப்பும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்க சம்மதித்து விட்டது என்றும் கூறியுள்ளார். மேற்கொண்டு இந்த ரீதியாக பேசப்பட்டு முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது நடந்து வரும் சட்டசபை பட்ஜெட் தாக்களிலே இது ரீதியாக பல சம்பவங்கள் நடைபெற்றது. முதலாவதாக சபாநாயக்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது ஓபிஎஸ் ஆதரவு அளித்தார். மறுநாளே அவருக்கு ஆதரவாகவும் எதிர்கட்சியினரிடம் பேசினார். இது அனைத்தும் கூட்டணியில் இணைக்கும் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.