வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலை அடைந்தார். அதன் பிறகு சிறிது காலம் அவர் பெங்களூருவிலேயே தங்கி இருந்தார்.அதன் பிறகு பிப்ரவரி மாதம் அவர் சென்னைக்கு வந்த சமையத்தில்.அவர் அதிமுகவை மீட்டெடுப்பார் என தெரிவிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில் தான் அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இதனை அடுத்து அவர் ஆன்மீக சுற்றுலாவை தொடங்கினார். இந்த நிலையில், நேற்று முன் தினம் போயஸ் தோட்டத்தில் கட்டப்பட்டுவரும் தன் இல்லத்தை பார்வையிட்டார்.
ஜெயலலிதா இருந்தவரையில் சசிகலா போயஸ் தோட்ட இல்லத்தில்தான் தங்கியிருந்தார்.ஆனால் தற்போது அந்த இல்லம் அரசுடமை ஆக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில்தான் அந்த வீட்டிற்கு அருகிலேயே தனக்கான புதிய இடத்தை சசிகலா நிர்ணயித்து வருகிறார். இந்த வீட்டைத்தான் நேற்று முன்தினம் அவர் பார்வையிட்டு இருக்கிறார் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்னரே இந்த வீடு முழுமையாக படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் இதற்கு இடையில் ஊரடங்கு உத்தரவுகள் போடப்பட்டதால் வேலைகளில் தொய்வு ஏற்ப்பட்டிருக்கிது. இதனால் இப்பொழுது இந்த கட்டிட வேலையை முழுமையாக முடிக்க வேண்டும் என்று சசிகலா உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முந்தினம் போயஸ் தோட்டத்தில் சசிகலா சுமார் 2 மணி நேரம் தங்கி இருக்கின்றார் இதற்கு பின்னணியில் வேறு ஒரு காரணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் முடிவு ஆளும் கட்சியான அதிமுகவிற்கு சாதகமாக வராது என்று தெரிந்ததால் தான் சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கையை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றால் அதன் பிறகு வேறு ஒரு கணக்கில் சசிகலா உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது தேர்தல் முடிவுக்குப் பின்னர் தன்னுடைய தலைமையில் அதிமுக ஒன்று சேரும் என்று சசிகலா நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஜெயலலிதா அரசியல் பயணத்தை ஆரம்பித்த இதே போயஸ் தோட்ட பகுதியில் இருந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்க சசிகலா திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.