முக்கிய பதவியில் அமரப்போகும் சசிகலா பன்னீர் செல்வம்.. தொண்டர்களுக்கு உறுதி கொடுத்த எடப்பாடி!!
அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விலகிய நிலையில் தற்பொழுது திமுகவை எதிர்ப்பதே நமது அனைவரின் நோக்கம் என்று இவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இவர்களுடன் சேர்ந்து எதிர்ப்பதற்கு ஒருபோதும் முட்டுக் கொடுக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த அதிமுக, தொடர்ந்து அனைத்து தேர்தலிலும் தோல்வியை தான் அடைந்து வருகிறது.
எடப்பாடி அவர்கள் ஆரம்ப கட்டத்தில் அரசியல் சார்ந்த பணிகளில் சற்று தொய்வுடன் இருந்ததுதான் அதற்கு முக்கிய காரணம். அது மட்டுமின்றி பாஜக உடனான நிலைப்பாடும் பலருக்கு அதிருப்தியை கொடுத்தது. தற்பொழுது பாஜக கூட்டணியில் இருந்து விலகியது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் விவகாரம் என அனைத்திலும் வேகமெடுத்து எடப்பாடி தீவிரம் காட்டி வருவது என செயல்பாடுகளை மாற்றியுள்ளார்.
இதனால் பழைய வாக்கு வங்கியை மீட்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் திமுகவை எதிர்ப்பதற்காக சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் இணைக்கலாம் என அதிமுக மூத்த தலைவர்கள் எடப்பாடிக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் எடப்பாடி அவர்கள் கட்டாயம் அவர்களை இணைக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார். தற்பொழுது நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் பிறகு இது சம்பந்தமாக ஒரு பேட்டியிலும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைக்கப்பட்டால் எந்தெந்த பதவிகள் கொடுக்கப்படும் என்ற பேச்சுவார்த்தையும் அடிபட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக எதிர்த்தாலும் கூட மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து அவர்களை கட்சியில் இணைக்க பரிந்துரை செய்து தான் வருகின்றனர். அந்த வகையில் மீண்டும் கட்சியில் இணைக்கும் பட்சத்தில் முன்னாள் துணை முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்திற்கு முக்கிய பதவி கொடுப்பதில் சற்று சிக்கலிருக்கும் என்றும் கூறுகின்றனர்.
இவர்கள் இருவரும் கட்சியில் இணைக்கப்படும் பட்சத்தில் சற்று ஓரம் கட்டப்படும் வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.