அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த சசிகலா! காவல் நிலையத்திற்கு சென்ற நிர்வாகி!

Photo of author

By Sakthi

அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த சசிகலா! காவல் நிலையத்திற்கு சென்ற நிர்வாகி!

Sakthi

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் சசிகலா என்று கோவில்பட்டியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. அந்த சுவரொட்டிகள் சசிகலா தலைமையில் கழகம் செல்லும் திராவிட இயக்கத்தின் ஐந்தாவது அத்தியாயம் அதிமுக மூன்றாவது தலைமுறையே ஆகஸ்ட் 18-ஆம் தேதி பிறந்தநாள் காணும் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் சின்னம்மா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கிறது.

இந்த நேரில் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்து அதிமுகவின் நகர கழக செயலாளர் விஜய பாண்டியன் என்பவர் கோவில்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் அந்த புகாரின் அடிப்படையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் இல்லாதவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத சசிகலா என்பவர் படத்தை போட்டு சுவரொட்டிகளை அடித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் தங்களுடைய கட்சியின் தொண்டர் மற்றும் பொது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் தங்கள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்திலும். சுவரொட்டிகள் ஒட்டி இருக்கிறார்கள் .ஆகவே மேற்சொன்ன நபர்கள் கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதன் காரணமாக, அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து சுவரொட்டிகளை அச்சிட்ட கொடுத்த அச்சகத்தின் மீதும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் அவர் தெரிவித்திருக்கிறார்.