வெளியானது சசிகலாவின் அரசியல் விலகலுக்கான உண்மையான காரணம்! அதிர்ச்சியில் டிடிவி தினகரன்!

0
138

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தமிழகத்திற்கு அந்த பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறார் என்ற கருத்து இந்தியா முழுவதும் இருந்து வந்தது. ஆனால் அவர் திடீரென்று கடந்த மார்ச் மாதம் மூன்றாம் தேதி தான் அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

அவருடைய இந்த அறிக்கை இந்தியா முழுவதிலுமே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள். அதோடு அவருடைய ஆதரவாளர்கள் முதல்கொண்டு டிடிவி தினகரன் வரையில் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது அந்த அறிக்கை. அதோடு அவர் மட்டுமல்லாமல் தினகரன் கூட அரசியலில் இருந்து விலகிக் கொள்ளுமாறு சசிகலா வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால் அந்த வேண்டுகோளை டிடிவி தினகரன் ஏற்றுக்கொள்ளாததால் அவர் இன்று வரையில் அதிமுகவை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்த நிலையில், சசிகலா அரசியலை விட்டு விலகியதற்கு உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பான தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அதாவது கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி சென்னையில் இருக்கின்ற லீலா பேலஸ் சொகுசு விடுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

அந்த சமயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுமார் 2 மணி நேரம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கின்றார். அதன் பிறகு அவர் டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். அந்த சந்திப்பு நிகழ்ந்த போது சசிகலா காரணமாக தென்மாவட்டத்தில் அதிமுகவிற்கு அது இந்த பாதிப்பு ஏற்படும் என்றும் தன்னுடைய வெற்றி வாய்ப்பும் கூட பறிபோகலாம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே சசிகலாவை கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஒருசில கருத்தும் நிலவி வந்தது சசிகலாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அந்த சமயத்திலேயே அமித்ஷாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை லீலா பேலஸ் சொகுசு விடுதியில் நடைபெற்ற ஆலோசனையை முடித்துக்கொண்டு டெல்லி சென்ற அமித்ஷா ஒரு சில தினங்களில் இதற்கான ஆக்ஷனில் இறங்கி விட்டார் என்று சொல்லப்படுகிறது. அதாவது மார்ச் மாதம் மூன்றாம் தேதி காலை டெல்லியில் இருந்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் சசிகலாவிடம் பேசி இருக்கின்றார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது உங்கள் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது. நீங்கள் சிறையில் இருந்த சமயத்தில் உங்களுடன் சம்பந்தப்பட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகள் மூலமாக 58 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் நீங்கள் பினாமி மூலமாக வைத்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. ஆகவே உடனடியாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது என்று சொன்னதும் சசிகலா இதனைப் பற்றித் தான் நான் நீதிமன்றத்திலேயே சொல்லிவிட்டேனே அதெல்லாம் எனக்கு சொந்தமானது கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

அப்போது அந்த அதிகாரி நீங்கள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் துல்லியமாக ஆராய்ந்து உங்களுக்கான ஆதாரங்களை எடுத்து விட்டார்கள். இப்பொழுது உங்களுக்கு இருக்கும் ஒரே வழி அரசியலில் இருந்து விலகுவது தான் அதை நீங்கள் செய்து விட்டால் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நடவடிக்கையை அப்படியே நிறுத்தி வைத்து விடுவார்கள். அதை பற்றிதான் உங்களிடம் தெரிவிக்க சொல்லி இருக்கிறார்கள் என சொல்லி இருக்கிறார் அந்த அதிகாரி.

அப்போது அந்த அதிகாரியை சமாளித்து தொலைபேசியை கட் செய்தாலும் அதன்பிறகு சசிகலா தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார் என தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக தனக்கு நெருக்கமான சட்ட நிபுணர்களுடன் இதுதொடர்பாக ஆலோசனை செய்து இருக்கிறார் சசிகலா. அப்போது அமலாக்கத்துறை விசாரணை என்று அழைத்துச் சென்றாலே அது கைது என்று தான் பெயர் படும் உடனடியாக அவர்கள் எந்த ஒரு முடிவிற்கும் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நீதிமன்றம் மூலமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடும் அதோடு உங்களுடைய விடுதலையை அவர்கள் தாமதப்படுத்தி விடுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் சட்ட நிபுணர்கள். ஆகவே மீண்டும் சிறையா அல்லது அரசியலை விட்டு விலகி இருந்து விடலாமா என மார்ச் மாதம் மூன்றாம் தேதி காலை முதல் சசிகலா ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே காணப்பட்டு இருக்கிறார்.

இதற்கிடையில் டெல்லியில் இருந்து சசிகலாவிடம் உரையாற்றிய அந்த அதிகாரி நம்முடைய திட்டத்திற்கு சசிகலா ஒத்துவரவில்லை என்று மேலிடத்திற்கு தகவல் அனுப்பி இருக்கின்றார். உடனடியாக சசிகலாவுக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிடபட்டது. அமலாக்கத் துறை தபால் நிலையம் வாயிலாக சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அமலாக்கத்துறையின் இப்படியான ஒரு நடவடிக்கையில் தான் சசிகலா மார்ச் மாதம் மூன்றாம் தேதி இரவு 9 மணி 45 நிமிடத்திற்கு திடீரென்று தான் அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த தகவல் டெல்லி மேலிடத்திற்கு எட்ட சசிகலாவிற்கு அமலாக்கத் துறை சார்பாக அனுப்பப்பட்ட நோட்டீசை சசிகலாவிற்கு செல்லாமல் தடுக்குமாறு அமலாக்கத் துறைக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் மூன்றாம் தேதி அனுப்பப்பட்ட அந்த நோட்டீசில் தேடி சென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகத்தை சென்று நோட்டமிட்டு இருக்கிறார்கள். அமலாக்கத் துறை ஊழியர்கள் அந்த நோட்டீஸ் செயின்ட் தாமஸ் மவுண்ட் தபால் அலுவலகத்தில் இருப்பதாக தகவல் கிடைக்க அங்கே சென்று சசிகலாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை அந்த ஊழியர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். ஆகவேதான் அமலாக்கத் துறை நோட்டீஸ் சசிகலாவை சென்றடையவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleகுறைந்தது தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை! காரணம் என்ன தெரியுமா?
Next articleஎன் மீது வழக்குப் போடுங்கள்! பிரியங்கா காந்தி ஆவேசம்!