எக்ஸாம் எழுத கல்லூரிக்கு செல்வார சசிகலா!

Photo of author

By CineDesk

எக்ஸாம் எழுத கல்லூரிக்கு செல்வார சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்தார்.சிறையிலிருக்கும் போது அவருக்கு அரசியல் பற்றிய எண்ணங்கள் தோன்றவில்லை போல கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் மாணவர்கள் போல பாடம் படிக்க ஆசை வந்துவிட்டது போல இதனால் சிறையிலிருந்த நிலையில் கன்னடத்தின் மேல் சசிகலாவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.இதனைத்தொடர்ந்து அவர் சிறையிலேயே கன்னடம் எழுதவும்,பேசவும் கற்றுக்கொண்டார்.மேலும் எம்.ஏ கன்னடம் படிக்கவும் வினபித்திருந்தார்.

இதுகுறித்து பல்கலைகழக தொலைதூர கல்வி இயக்குனர் பேராசிரியர் கூறுகையில்,சசிகலாவிற்கு கன்னடம் பயில அதிக அளவு ஆர்வம் இருந்துள்ளது.அதனால் அவர் சிறையிலிருக்கும் போதே எம்.ஏ படிப்பில் சேர்த்தோம்.அவர் தேர்வுகளை எழுத இருந்த நிலையில் இந்த கொரோனா பதிப்பானது பெருமளவு பாதித்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு விட்டது.இப்பொது அந்த படிபிற்கான தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

வருகிற 24 ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது.இதில் 254  மாணவ கைதிகள் கலந்து தேர்வு எழுத உள்ளனர்.சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி சென்னையில் வசித்து வருகிறார்.தற்போது அவர் தேர்வு எழுதுவார என்ற சந்தேகம் எழுந்துள்ளது.