கூவத்தூர் பாணியை கையிலெடுத்த எடப்பாடி! அமைச்சர்களுக்கு போடப்பட்ட அதிரடி உத்தரவு!

Photo of author

By Sakthi

எதிர்வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகும் நிலையில் 22ஆம் தேதி அனைத்து அமைச்சர்களையும் தன் சேம்பருக்கு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இடம் இருந்து அழைப்பு வந்து இருப்பதாக சொல்கிறார்கள்.

வெகுகாலமாக ஜெயலலிதாவின் கூடவே நிழல் போல இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தாலும்கூட அந்த பதவிக்கான அதிகாரம் சசிகலாவிடம் தான் இருந்ததாக சொல்கிறார்கள். கட்சி ஆட்சி என இரண்டிலுமே சசிகலாவின் அதிகாரம் மேலோங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் ,மாவட்ட செயலாளர்கள் வரையில் சசிகலா யாரை விரும்புகிறாரோ அவர் தான் இருக்க முடிந்ததாக சொல்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கட்சியின் புது நபர்களை சேர்த்திருந்தாலும் சசிகலாவிடம் அனுசரணையாக இருந்தால் மட்டுமே அவர்களால் கட்சியில் நீடிக்க முடியும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

அந்த விதத்தில் ஜெயலலிதா ஆட்சி அமைத்த 1991ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா மறையும்வரை அதிமுகவை மறைமுகமாக அதிகாரம் செய்தவர் சசிகலாதான் என்று சொல்கிறார்கள். இப்போதும்கூட அதிமுகவில் இருக்கும் அனைத்து சூட்சுமங்களும் சசிகலாவிற்கு தெரியும் என்று சொல்கிறார்கள். அதிமுகவில் அனைத்து விதமான நிர்வாகிகள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று 90% பேர் வரை சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்கள் தான் என்று சொல்கிறார்கள். சசிகலாவின் கருணையால் மட்டுமே அதிகாரத்திற்கு வந்தவர்களே அதிகம் என்று தெரிவிக்கிறார்கள். பன்னீர்செல்வம் கட்சியை உடைப்பதற்கு முயற்சி செய்த நேரத்தில் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரே ஒரு அமைச்சர்கள் மட்டுமே அவருடன் சென்றதாகவும் மற்றவர்கள் அனைவரும் சசிகலாவுடன் இருந்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சசிகலா கருணையால் கிடைத்த பதவியை சென்ற நான்கு ஆண்டு காலமாக எடப்பாடி பழனிச்சாமி பாதுகாத்து அதனை நிறைவு செய்ய இருக்கின்றார். அதே சமயத்தில் சசிகலாவும் விடுதலையாக இருக்கிறார். சிறைக்கு போவதற்கு முன் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவர் சத்தியம் செய்ததை யாரும் மறுக்கவோ மறக்கவோ இயலாது. ஆகவே சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு அரசியல் ரீதியாக சசிகலாவின் செயல்பாடானது மிகவும் வேகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதிமுகவில் இதுவரையில் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், இருந்தவர்கள் இனி வரும் காலங்களிலும் அவ்வாறு இருப்பார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதன் காரணம் சசிகலா விசுவாசம் மற்றும் எடப்பாடி மீதான நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கலாம்.

இதுவரையில் ஆட்சியானது எடப்பாடி பழனிசாமி இடம் இருந்து வந்தது. ஆனால் எதிர்வரும் தேர்தலில் வென்றால் மட்டுமே எடப்பாடி இடம் அதிகாரம் இருக்கும் அதே நேரத்தில் சசிகலா ஏறக்குறைய 36 ஆண்டுகள் ஜெயலலிதா உடன் இருந்தவர். ஜெயலலிதாவை வழிநடத்தியவர் என்று சொல்லப்படுகிறது அதிமுகவின் அனைத்தையும் இயல்பாகவே தங்களுடைய பார்வை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல அமைச்சர்கள் ஒரு சிலரும் சசிகலாவிடம் சரண் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்காதவர்கள் சசிகலாவை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து ஒரு கணிசமான எண்ணிக்கையில் நபர்கள் சசிகலா பக்கம் போனால் அதை சமாளிப்பது குறித்து வரும் 22ஆம் தேதியை ஆலோசனை நடத்துவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்திருக்கிறார். அதே சமயத்தில் சசிகலாவை சமாளிப்பதற்கு டெல்லியில் ஏற்பட்டிருக்கும் உடன்பாடுகள் குறித்தும் எடப்பாடி அமைச்சர்களுடன் அறிவுரையில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கிறார்கள். தேர்தலில் போட்டியிட இயலாது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்தவர் என்ற காரணத்தினால், அவரால் அரசியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிட இயலாது என்பதையும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து இருக்கும் தன்னை நம்பும் படியாக எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றுவார் என்று சொல்கிறார்கள்.

சசிகலாவுடன் தொடர்பில் இருக்கும் ஒரு சிலரை கட்சியின் பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்தும் நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை செய்வார் என்றும் தெரிவிக்கிறார்கள் .இதனை அடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் போன்றோர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.