சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்ததிலிருந்து அமைதியாகவே இருந்து வந்தார். இந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் தான் முழுமையாக அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.இதனால் அவருடைய ஆதரவாளர்கள் மிகப் பெரிய அதிர்ச்சி அடைந்தார்கள். அதோடு டிடிவி தினகரன் இதுதொடர்பாக சசிகலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த அறிக்கை விட்டதிலிருந்து அமைதியாகவே இருந்து வந்த சசிகலா நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அவருடைய இந்த பயணமானது தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியது. நேற்றையதினம் விளார் கிராமத்தில் இருக்கின்ற அவருடைய குலதெய்வமாக விளங்கி வரக்கூடிய வீரனார் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து இருக்கிறார் சசிகலா.
அந்த சமயத்தில் சசிகலாவுடன் அவருடைய உறவினர்கள் பலர் வந்து இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு திருவிடைமருதூர் கோவிலில் சசிகலா வழிபாடு செய்த சமயத்தில் கோவிலில் இருந்த பூசாரி ஒருவருக்கு திடீரென்று அருள் வந்து இருக்கிறது. திடீரென அருள் வந்த அந்த பூசாரி சசிகலாவை பார்த்து மிக ஆக்ரோஷமாக அருள்வாக்கு தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பூசாரி தெரிவித்ததாவது நீ வெகு நாட்களுக்கு பிறகு இங்கே வந்திருக்கிறாய், உனக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை எல்லாமே சரியாக நடந்து கொண்டிருக்கிறது. உன் குலதெய்வத்தை முழுமையாக நம்பு எல்லாம் சரியாக நடக்கும் நீ சந்தோசமாக இருக்கப் போகிறாய். பிரச்சினைகள் ஒவ்வொன்றாக விலகும் நம்பிக்கையை மட்டும் கைவிட்டு விடாதே என்று அந்த பூசாரி தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்ட சசிகலா ஒரு சில நிமிடம் திகைத்துப் போய் அதே இடத்தில் நின்று விட்டாராம்.
அதன் பிறகு தன்னுடைய காரில் ஏறி அமர்ந்த சசிகலா யாரோ ஒரு முக்கிய நபருடன் சுமார் 15 நிமிடம் தனியாக உரையாற்றி இருக்கிறார். ஆனால் அந்த ரகசிய நபர் யார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. அனேகமாக அவர் அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதோடு சசிகலா தஞ்சாவூர் சென்ற அதே நாள் தஞ்சாவூர் பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.