அதிரடியாக களத்தில் இறங்கிய சசிகலா.. தொண்டர்களுக்கு பறந்த அறிவிப்பால் ஷாக்கான ஈபிஎஸ்..!!
தமிழக அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த ஜெயலலிதா கடந்த 10 ஆண்டுகளாகவே திமுகவிற்கு போக்கு காட்டி வந்தார். அதிமுகவை வெல்வது திமுகவிற்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. அந்த அளவிற்கு ஜெயலலிதா அவரின் கட்சியை பலப்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வைத்திருந்தார்.
ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவிற்கு சரியான தலைமை இல்லாமல் போனது. கட்சியின் தலைமை யார் என்பதில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கட்சியே இரண்டு மூன்று குழுவாக பிரிந்து விட்டது. முதலில் கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அந்த சமயத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி அவர் சிறை சென்றார்.
அப்போது ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்த கட்சியை நடத்தி வந்தார்கள். இருவரும் சேர்ந்து அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கினார்கள். அவரும் அரசியலில் இருந்து விலகுவதாக கூறி ஷாக் கொடுத்தார். இருப்பினும் அடிக்கடி அதிமுக தொண்டர்களை ஒன்றிணைப்பேன் என்று கூறி வருவார். ஏனெனில் ஓபிஎஸ் தலைமையில் ஒரு கூட்டம், ஈபிஎஸ் தலைமையில் ஒரு கூட்டம், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு கூட்டம் என மூன்று பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.
இதனால் அதிமுகவிற்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் பிரிந்து திமுக ஈஸியாக வெற்றி பெற்று விடுகிறது. எனவே இதுநாள் வரை பொறுமை காத்த சசிகலா தற்போது அதிரடி முவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி, அதிமுக தொண்டர்களுக்காக சசிகலா படிவம் ஒன்றை தயார் செய்துள்ளார். அதில் சில முக்கிய தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதனை பூர்த்தி செய்து சசிகலாவிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ ஒப்படைக்கலாமாம். இதனால் ஈபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.