அதிமுக தலைமைக்கு செக் வைத்த சசிகலா!

Photo of author

By Sakthi

அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக, சிகிச்சை பெற்றுவரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சசிகலா தரப்பு முக்கிய ஆவணத்தில் கையெழுத்து வாங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு பின்னர் சசிகலா அரசியலில் இறங்குவதற்கான பணிகளை தொடங்கினார். அதனடிப்படையில், அதிமுகவின் தொண்டர்களுடன் தொலைபேசி மூலமாக உரையாடி நாள்தோறும் பல ஆடியோக்களை வெளியிட்டு வந்தார் சசிகலா. இதுவே அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்தது.

இப்படியான நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக,அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சந்திப்பதற்காக சசிகலா போனது மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.இருந்தாலும் அவர் அதிமுகவை பரபரப்பில் ஆழ்த்த வேண்டும் என்ற காரணத்திற்காக, மட்டும் மதுசூதனனை சந்திக்க வில்லை என்ற ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதிமுகவின் முக்கிய கூட்டங்களைக் கூட்டுவதில் அவைத் தலைவரின் கையெழுத்து மிக முக்கியம் என்று சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட ஒரு ஆவணத்தில் மதுசூதனன் சசிகலாவிற்கு கையெழுத்திட்டு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் சசிகலா மருத்துவமனை சென்று அவரை சந்தித்து விட்டு வந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.அதிமுகவின் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மிக விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. ஆகவே இந்த சமயத்தில் சசிகலா மதுசூதனன் கையெழுத்து வாங்கி இருக்கிறார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் அதிமுகவை பரபரப்பில் ஆழ்த்தி இருக்கிறது.