இரண்டு நாட்களில் தெரிந்துவிடும் சசிகலாவின் விடுதலை விவரம்! முக்கிய தகவல்!

Photo of author

By Parthipan K

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இது தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரிதாக வெடித்துள்ளன.

இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கூறியதால் சசிகலாவின் விடுதலை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் அபராத தொகையை செலுத்த சசிகலா தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. இருந்த போதிலும் அதற்கு முன்னதாகவே அவரை வெளியே கொண்டுவர டிடிவி தினகரன் அனைத்து நடவடிக்கைகளையும் இறங்கியுள்ளார்.

அதேசமயம் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவெடுக்கும் உரிமை சிறை துறையையே சேரும் என கூறப்படுகிறது. இதற்காக சசிகலா சிறை நிர்வாகத்திடம் ஒரு மனுவையும் எழுதியுள்ளார்.

இந்தநிலையில் சசிகலாவின் விடுதலை தொடர்பான தகவல் இரண்டு நாட்களில் தெரியவரும் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் சசிகலாவின் விடுதலையை பற்றி அவர் கூறுகையில், ‘கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே நாளை ஏதாவது தகவல் வரும் என எதிர்பார்க்கிறோம். சசிகலாவின் விடுதலை குறித்து இரண்டு நாட்களில் தெரியவரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.