சசிகலாவின் ஸ்லீப்பர் செல்ஸ் அதிமுகவில் உள்ளனர்! டிடிவியின் அதிரடி பேச்சு!

Photo of author

By Rupa

சசிகலாவின் ஸ்லீப்பர் செல்ஸ் அதிமுகவில் உள்ளனர்! டிடிவியின் அதிரடி பேச்சு!

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை முடித்து பெங்களூரில் இருந்து சென்னை வந்தடைந்தார்.இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியது,சசிகலாவின் வருகையையொட்டி தமிழகத்தில் பல நடவடிக்கைகள்     நடத்தப்பட்டன.இவையனைத்தும் சசிகலாவிற்கு செய்த அநியாயம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அதிமுகவின் பொது செயலாளர் சசிகலா என்பதால் பொதுக்கூட்டம் கூட்ட உரிமை உள்ளது எனவும்,இதுமட்டுமல்லாமல் ஒரு உறுப்பினரை விலக்கவும் இவருக்கு தான் உரிமை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் திமுக ஆட்சிக்கு வராமல் இருக்க நாங்கள் போராடுவோம் எனவும்,நான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன் அதில் ஒன்று ஆர்.கே நகர் என்றும் கூறினார்.

ஜெயலலிதா நினைவிடம் திறந்த பிறகு சசிகலா அங்கு செல்வார் என்னும் அறிவிப்பையும் கொடுத்தார்.அதிமுகவில் எங்களது ஸ்லீப்பர் செல்ஸ் உள்ளனர் என அதிரடியாக டிடிவி தினகரன் பேசினார்.அந்த ஸ்லீப்பர் செல்ஸ்  எம்.எல்.ஏவாக இருக்க தேவை இல்லை.அதிமுகவின் கட்சி உறுப்பினராக கூட இருக்கலாம் எனவும் குதுர்க்கமான முறையில் பேசியுள்ளார்.

இவர் கூறியது போல் 10 அமைச்சர்கள் மற்றும் 25 க்கும் மேற்ப்பட்ட எம்.எல்.ஏக்கள் அம்மா முன்னேற்ற கழகத்தில் சேர போவதாக வதந்திகள் வந்த நிலையில்,அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் தென் மாவட்ட அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன.

இதை வைத்து பார்க்கும்போது டிடிவி தினகரனின் குதுர்க்கமான பேச்சு உண்மை போல் புலப்படுகிறது.