திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக மாறிய சசிகலாவின் அறிக்கை! கடுப்பில் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தமிழகம் வரும் வழிநெடுகிலும் மாலை, மரியாதை, மாநாடு, போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் நடந்தது. அவை அனைத்துமே தமிழகத்தில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்பதை காட்டிக் கொள்வதற்காக தான் என்று ஒரு பேச்சு அடிபட்டது.அவர் சிறைக்கு சென்ற சமயத்திலேயே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அங்கேயே நான் மறுபடியும் வந்து அதிமுகவை கைப்பற்றுவேன் என்று சத்தியம் செய்துவிட்டு சிறைக்கு சென்றார். அந்த சத்தியத்தை நிறைவேற்றும் நோக்கத்திலேயே அவர் சிறையிலிருந்து வெளியே வந்த சமயத்தில் அவ்வாறு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் தமிழகம் திரும்பிய பின்பு சசிகலாவின் நடவடிக்கைகளில் எந்த ஒரு வேகமும் இல்லை அவர் சென்னை தி நகரில் இருக்கின்ற அவருடைய வீட்டில் வசித்துவந்தார். இன்னும் சொல்லப்போனால் வீட்டிற்குள்ளேயே தான் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். பெரிய அளவில் எந்த ஒரு நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவில்லை ஆனால் டிடிவி தினகரன் மட்டும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பணிகளை கவனித்து வந்தார்.

அப்படி இருக்கையில், நேற்று இரவு திடீரென்று தான் அரசியலில் இருந்து விலகுவதாகவும், நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒன்றிணைந்து நின்று நம்முடைய பொது எதிரியான திமுகவை வெற்றி பெற வேண்டும் எனவும், நான் இதுவரை எந்த ஒரு பெயருக்கும் அல்லது பதவிக்கும் ஆசைப்பட்டது கிடையாது என்று. ஒரு அதிரடி அறிக்கை வெளியிட்டார்.இதனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மிகப் பெரிய அதிர்ச்சியில் உறைந்து போய் இருப்பதாக சொல்லப்படுகிறது. சசிகலா தான் நம்முடைய அரசியல் எதிர்காலம் என்று அவருக்காக காத்திருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அழுக்கு சசிகலாவின் இந்த அறிவிப்பு வேறு அதிர்ச்சியாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் அவர் எதற்காக அவ்வாறு ஒரு முடிவை எடுத்தார் அதற்கான உண்மையான காரணம் என்ன என்று பலரும் ஆராய தொடங்கி விட்டார்கள் அந்த விதத்தில் அதிமுகவிற்கு திமுக கொடுக்கும் தொல்லைகளை விட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சற்றே அதிகமாக குடைச்சல் கொடுத்து வந்ததாகவும் அதோடு அதிமுக தொண்டர்கள் அநேகம்பேர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வந்து இணைந்த வண்ணம் இருந்தார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் மத்திய அரசின் சார்பாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஆனால் அந்த முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை.மத்திய அரசின் குறிக்கோள் திமுகவை தமிழகத்தில் எப்படியாவது செயலிழக்க செய்ய வேண்டும்அந்த கட்சியை பலமிழக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் .
ஆகவேதான் திமுகவை அதிமுகவை போலவே தன்னுடைய முதல் எதிரியாக கருதி கொண்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அதிமுகவுடன் இணைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. ஆனாலும் அதில் மத்திய அரசால் வெற்றி பெற முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுகவிற்கு ஒரு பெரிய தொந்தரவாக இருந்து வரும் சசிகலா அரசியலை விட்டு விலகினால் நிச்சயமாக அவருடன் இருக்கும் அதிமுக தொண்டர்கள் மறுபடியும் அதிமுகவிற்கு திரும்புவார்கள் என்பது மத்திய அரசின் நம்பிக்கையாக இருக்கிறது.அதோடு மட்டுமல்லாமல் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை முடிந்து சசிகலா விடுதலை அடைந்திருந்தாலும் அவர் விடுதலை அடைந்த அன்றே வருமான வரித்துறை சசிகலாவிற்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி இருக்கின்றது. அதுவுமில்லாமல் சில பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அதனை காரணமாக வைத்து மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, சசிகலா இவ்வாறு ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதற்கேற்றார்போல் சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஒரு தாய் மக்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை ஆட்சிக் கட்டிலை நெருங்க விடாமல் செய்ய வேண்டும் என்ற வாசகத்தை அவருடைய அறிக்கையில் சேர்த்திருக்கிறார்.சசிகலாவின் இந்த அறிக்கையானது திமுக கூட்டணியில் தற்சமயம் சலசலப்பை உண்டாக்கி இருப்பதாக சொல்கிறார்கள். அந்த கூட்டணியும் தற்சமயம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சசிகலாவின் இந்த அறிக்கையை முன்னிட்டு அந்தக் கூட்டணியில் இருக்கக்கூடிய சிறு சிறு கட்சிகள் கூட பெரிய அளவில் தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள். ஆகவே இந்த சிக்கலில் இருந்து திமுக வெளியே வந்து ஆட்சி அமைக்குமா அல்லது மறுபடியும் எதிர்க்கட்சி வரிசையில் அமருமா என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது