சசிகலாவை சந்தித்த முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

0
138

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இன்றைய தினம் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்த நிலையில், திடீரென்று சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும் சந்தித்திருக்கிறார்கள்.

சென்னை டி நகர் வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி சசிகலா மரியாதை செய்திருக்கிறார். அதன்பிறகு டி நகர் இல்லத்தில் சசிகலாவை நடிகர் சரத்குமாரும், அதேபோல ராதிகா சரத்குமார் அவர்களும், சந்தித்து சென்ற பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும், சந்தித்திருக்கிறார்கள். இந்த விவகாரமானது அரசியல் வட்டாரங்களில் தற்சமயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Previous articleசத்துணவு ஊழியர்கள் போராட்டம்! அரசிற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தும் திமுக!
Next articleகோழி பண்ணை தொழிலாளர்களுக்கு பரவிய பறவைக்காய்ச்சல்- பரபரப்பு தகவல்!