ரம்மி, 96, மெய்யழகன் போன்ற படத்தின் இயக்குனர் பிரேம்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசிய தகவல் ஒன்றை கூறினார். அதில், பசங்க திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதியை நடிக்க பரிந்துரைத்தேன். ஆனால் அப்படத்தின் இயக்குனர் விஜய் சேதுபதியை பார்த்துவிட்டு அந்த கதைக்கு ஏற்ற தோற்றமில்லை என கூறினார். இதற்கடுத்து விஜய் சேதுபதியே முதன் முதலாக விமலை அந்த படத்தில் அறிமுகப்படுத்தினார்.
தனக்கு வந்த வாய்ப்பை மற்றவருக்கு கொடுத்ததை மிகவும் நெகிழ்ச்சியுடன் பார்த்தேன். அதன் பிறகு அவருடன் பணியாற்ற ஆவலாக இருந்தேன். பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவான திரைப்படம் சுந்தரபாண்டியன் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பார். இந்த திரைப்படம் உருவாகும் போது அவர் ரம்மி,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து முடித்திருந்தார்.
அவர் இந்த திரைப்படத்தின் கதாபாத்திரத்தை ஏற்று கொள்வாரோ மாட்டாரோ என்று இருந்தோம். ஆனால் இந்த கதாபாத்திரத்தை நான் செய்கிறேன் என ஒத்துகொண்டார்.பிறகு முதல் நாள் சூட்டிங்கிற்கு நடிகர் விஜய் சேதுபதி வந்தார் அவர் இயக்குனரிடம் சென்று இந்த சீனோட மூட் என்ன என்று கேட்டிருக்கிறார். அவர் என் அருகில் வந்து இதுவரை இதுபோன்று என்னிடம் யாரும் கேட்டதில்லை என்று பெருமையாக கூறி சென்றார்.
அதன் பிறகு நடிகர் சசிகுமார் என்னிடம் வந்து அவர் எனக்கு தெரிந்த நண்பர் அவரை பக்குவமாக கவனித்து கொள்ளுமாறும், அவரும் ஒரு ஹீரோ அவருக்கு சரியான ஒரு கதாபாத்திரத்தை கொடுக்குமாறும் தெரிவித்ததாக கூறினார்.