உலகில் விஞ்ஞான வளர்ச்சியில் முக்கிய இடம் வகித்துள்ளது செயற்கைக்கோள் ஆகும். இது மனிதர்களுக்கு பல வகையில் நன்மை அளித்துள்ளது. உலகத்திற்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து தப்பிப்பதற்கும், எச்சரிக்கையாக இருப்பதற்கும் இது பல சமயங்களில் உதவியுள்ளது.
‘ரஷ்ய நாடு’ செயற்கைக்கோள்களை கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக செயல்படும் நாடாகும். ஏனெனில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கைக்கோள் “ஸ்புட்னிக்” ரஷ்யாவை சேர்ந்தது. அந்த வரிசையில் சில தினங்களுக்கு முன் ஆர்டிக் கண்டத்தில் பனிப்பொழிவு அதிகரித்தது. மேலும் அங்குள்ள பெரிய பனிப்பாறைகள் உருகின.
இதனால் அங்குள்ள மக்களுக்கு சில பாதிப்புகள் நேர்ந்துள்ளது. இவ்வாறு இனிமேல் நடக்கக் கூடாது என்பதற்காக எச்சரிக்கை விதமாக “ஆர்டிகா- எம்” என்ற செயற்கைக்கோளை ரஷ்யா விண்ணில் செலுத்தியுள்ளது.
இந்த செயற்கைக்கோள் சோயூஸ் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. பைகோனூர் ஏவுகளத்தில் உள்ள விண்வெளித்துறையில் ஆராய்ச்சியாளர்கள் செயற்கைக்கோள் சரியான புவி வட்ட நேர்கோட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.