சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0
139

சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனியின் நாமம் என்பது கர்ம சனி மேலும் மேஷ ராசியில் சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை 7ம் பார்வை 10ம் பார்வைபோக ஸ்தானம் சுக ஸ்தானம் களத்திர ஸ்தானம்உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து 10ஆம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருக்கிறார்.சனிபகவான் தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். சகோதர சகோதரிகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் மாறி புரிதல் ஏற்படும். திருமண ஏற்பாடுகளுக்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதன் மூலம் சாதகமான முடிவுகள் உண்டாகும்.

மேலும் பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் இழுபறியில் உள்ள காரியங்கள் வெற்றியை ஏற்படுத்தி தரும். இடம் சார்ந்த விஷயங்களை கவனமாக கையாளுவதன் மூலம் நற்பலன்களை அள்ளித்தரும்.

பொதுவாழ்வில் நற்பெயரும், புகழும் மேலோங்கும். செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். அலைச்சல்கள் அதிகரித்த போதிலும் ஆதாயம் இருக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஈடேறும். நண்பர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்களது படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவர்கள் அவர்களது கல்வி கவனத்தை துரிதப்படுத்துவதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெறலாம். ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக தேர்வு முடிவுகள் வந்துசேரும். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் சம்பந்தமான துறையில் உள்ளவர்கள் புதுவிதமான சாதனைகளைப் படைத்து அதற்காக பரிசுகள் மற்றும் பட்டங்களை பெறுவீர்கள்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு :புத்திர பாக்கியம் விரைவில் கைகூடும். மற்றவர்களுக்கு உதவும்போது உதவி பெறுவோரின் தன்மைகள் அறிந்து செயல்படுவது நன்மையை அளிக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தங்களது தொழில் கூட்டாளிகளிடம் சற்று கவனத்தை கடைபிடிப்பது அவசியமாகும். தாய்வழி உறவினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் அனுகூலமான சூழல் அமையும். சுப விரயங்களால் வாழ்க்கையில் புதுவிதமான பரிணாமத்தை அடைவீர்கள். தற்பெருமை பேசும் இடத்தில் அமைதி காப்பது உங்களின் மீதான கீர்த்தியை மேம்படுத்தும்.

வழிபாடு முறை :மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று அவரவர்களின் குலதெய்வத்தை வழிபாடு செய்வதன் மூலம் நன்மைகளை பெறலாம்.

 

Previous articleபத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்…
Next articleஃபுல்காவுக்கு சைட் டிஷ் ! கண்டிப்பாக இதை ட்ரை செய்து பாருங்கள்!