இந்தியர்கள் பலரும் வேலை தேடி வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது அன்றாடம் நிகழும் நிகழ்ச்சியாகவே உள்ளது. இவ்வாறு உலகில் உள்ள பல நாடுகளில் இந்தியர்கள் புலம்பெயர்ந்து பணியாற்றி வரும் சூழலில், சவுதி அரேபியாவானது புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது சவுதி அரேபியாவில் இந்தியாவிலிருந்து பணிபுரிய சென்ற டிரைவர்கள் வீட்டு வேலை ஆட்கள் மற்றும் நர்சிங் போன்ற வேலைகளுக்கு பணியமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு 18 மணி நேர வேலை பளு கொடுத்து அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுவதாகவும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கையானது மிகவும் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் சவுதி அரேபியா அரசு தொழிலாளர் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து Gulf News வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது :-
சவுதி அரேபியா நாட்டில் தொழிலாளர் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தங்களில் பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை 10 வாரங்களில் இருந்து 12 வாரங்களாக உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் வேலை பார்க்கக் கூடியவரின் கணவன் அல்லது மனைவி யாராவது இறந்து விட்டால் சம்பளத்துடன் கூடிய 5 நாட்கள் விடுமுறை அளிப்பதாகவும் அதேபோன்று திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் சம்பளத்துடன் கூடிய 5 நாட்கள் விடுமுறை விடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வேலையை விட்டு நிற்க வேண்டும் என்றால் 30 நாட்கள் நோட்டஸ் பீரியட் ஆகவும் அல்லது வேலையை விட்டு நீக்குகிறார்கள் என்றால் அதற்கான நோட்டீஸ் பீரியடாக 60 நாட்கள் செயல்படும் என்றும் புதிய சட்ட திருத்தங்களின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.