சவுதி அரேபியாவை பொருத்தவரையில் கொலை வழக்கு மற்றும் போதை பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதில் வெளிநாட்டவர் அந்நாட்டிற்கு போதைப்பொருள் கடத்தி வருகிறார் எனில் அவர் மீது அந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படுவது அந்நாட்டின் சட்டப்படி சரியானதாகும்.
இப்படி ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டவரின் மரண தண்டனை எண்ணிக்கை அதிகரித்த வருவதாகவும், அதில் இந்த ஆண்டு 100 என்பது சவுதியின் புதிய உச்சமாகவும் அந்நாட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மற்ற நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை :-
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், ஏமனில் இருந்து 20 பேர், சிரியாவில் இருந்து 14 பேர், நைஜீரியாவில் இருந்து 10 பேர், எகிப்தில் இருந்து 9 பேர், ஜோர்டானில் இருந்து 8 பேர் மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 7 பேர் அடங்குவர்.
சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா மூன்று பேரும், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தலா ஒருவரும் இருந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024ல் இதுவரை சவுதி அரேபியா மொத்தமாக 274 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் மரண தண்டனை பெற்றவர்கள் போதை பொருள் குற்றத்திற்காகவே சிக்கியவர்கள் என்பது சவுதி நாட்டினுடைய தகவல்களிலிருந்து பெற முடிகிறது.