தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் ஸ்டாலின்! சரிகிறதா மோடியின் செல்வாக்கு?

0
83

கடந்த 2006ஆம் வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து 5 ஆண்டுகாலம் கடந்த 2011ஆம் ஆண்டு வரையில் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார்.

ஆனால் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.

அதற்கு காரணம் தமிழகம் முழுவதும் திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மணல் குவாரி நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகள்தான் என்று பலராலும் தெரிவிக்கப்பட்டது. அதோடு அந்த சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் மின் பிரச்சினை பூதாகரமாக இருந்தது.

இந்த நிலையில், சென்ற ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் 10 வருட காலத்திற்கு பின்னர் தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து அவருக்கு தேசிய அளவில் ஆதரவு பெருகி வருகிறது. பல மாநில முதலமைச்சர்களும் அவர் என்ன செய்கிறார் என்பதை உற்று நோக்கிக் கொண்டு வருகிறார்கள்.

அதோடு பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு மாபெரும் எதிர் கூட்டணியை கட்டமைத்து வருகிறார். அதில் ஒரு முக்கிய அங்கமாக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகம் செல்லும் வழியில் டிடிகே சாலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் சதீஷ் என்பவர் எங்களுக்கு உதவுங்கள் என்ற பதாகையுடன் காத்திருந்தார்.

.அவரை பார்த்தவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய வாகனத்தை நிறுத்தச் சொல்லி அந்த மாணவரிடம் உரையாற்றியதாகச் சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் அந்த மாணவர் நீட் தேர்வுக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு நன்றி தெரிவித்து தன்னுடைய ஆதரவை கூறினார். நீட் தேர்விலிருந்து காப்பாற்றுங்கள் என்று ஸ்டாலினிடம் அவர் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு சார்பாக ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழக மாணவர்களுடைய கல்வி வளர்ச்சிக்கு தடை விதிக்கும் நீட் தேர்வை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பிரதமரை கடந்த வருடம் ஜூன் மாதம் 17ஆம் தேதி முதலமைச்சர் நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வழங்கொனார்.

அதோடு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்கும் சட்டமசோதா செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மாணவர்களின் நலனை காத்திட தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தலைமைச் செயலகம் செல்லும் வழியில் டிடிகே சாலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சார்ந்த மாணவர் சதீஷ் முதலமைச்சரே உதவுங்கள் என்ற பதாகையுடன் சந்தித்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு நன்றி கூறி தன்னுடைய ஆதரவையும் தெரிவித்தார்.

அதோடு தான் ஆந்திர மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வு காரணமாக, மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் போய்விட்டது. ஆகவே உங்கள் போராட்டம் ஆந்திர மாநிலத்திற்க்காகவும், இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அந்த மாணவனிடம் நீட் தேர்வு ரத்து குறித்த சட்ட போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இது குறித்து அகில இந்திய அளவிலும் இதற்காகத்தான் குரல் கொடுத்து வருவதாகவும், கூறினார்.

ஆகவே நம்பிக்கையுடன் ஊருக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அந்த மாணவரும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டுச் சென்றார் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.