நடிகையர் திலகம் சாவித்ரி தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கொடிகட்டி பறந்த நடிகை. இவருடைய வாழ்க்கை வரலாற்றை சமீபத்தில் மகாநதி என்ற படத்தின் மூலம் வெளிகாட்டப்பட்டது.
நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல்வேறு திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில் ரியல் ஜோடியாகவும் ரீல் ஜோடியாகவும் மக்கள் மனதில் மிகப் பிரபலமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு விஜய சாமுண்டீஸ்வரி என்ற மகளும், சதீஷ் குமார் என்ற மகனும் இருக்கின்றனர்.
இந்தப் படத்திற்குப் பிறகு ரசிகர்கள் மனதில் ஒரு தனி மதிப்பும் மரியாதையும் பெற்றார்.தற்போது சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி யாரும் இதுவரை பார்த்திராத அளவிற்கு அரிய புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாவித்திரிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்ற நிலையில் அவர்கள் சிறுவயதில் குடும்பத்தாருடன் இருக்கும்போது எடுத்துக்கொண்ட பல்வேறு அழகிய புகைப்படங்களை தற்பொழுது சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி வெளியிட்டுள்ளார்.
அதில் சாவித்திரியின் மகன் சதீஷ் குமார் பிறந்த குழந்தையாக இருக்கும் போது ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி அவரை கையில் தூக்கி வைத்து கொஞ்ச அருகில் விஜய சாமுண்டீஸ்வரி சமத்து குட்டி பெண்ணாக தம்பியை ரசித்தவாறு அந்த போட்டோவில் உள்ளது.
இந்த அழகிய அரிய புகைப்படங்களை விஜய சாமுண்டீஸ்வரி தற்பொழுது தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து “என்னுடைய தம்பி தங்கை” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த நடிகை சாவித்திரியின் ரசிகர்கள் பழைமையான நினைவுகளை கண்முன் கொண்டு வருகிறது என நெகிழ்ந்து வருகின்றனர்.

