சவுக்க மீடியா நிறுவனரும், பிரபல அரசியல் விமர்சகர்மான சவுக்கு சங்கரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
காவல் துறையின் உயர் அதிகாரிகளையும், பெண் காவல் அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசியதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர்.
தேனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சோப்பு சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், விசாரணைக்காக கோவைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், கைது செய்த சவுக்கு சங்கரை அழைத்து சென்ற காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த வாகன விபத்தில் படுகாயம் அடைந்த சவுக்கு சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் போலீசார் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த பத்து தினங்களாகவே சவுக்கு சங்கருக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்களை அடுத்தடுத்து போலீசார் கைது செய்து வரும் நிலையில், தற்போது சவுக்கு சங்கரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சவுக்கு மீடியா மற்றும் சவுக்கு மீடியாவில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு அதிமுக தரப்பில் இருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது.
பல்வேறு காலகட்டங்களில் தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி வரும் சவுக்கு சங்கர், தான் எடுக்கும் நிலைப்பாட்டிற்காக ஏற்ப அரசியல் கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று குரல் கொடுத்து வந்த சங்கர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக மீது கடுமையான விமர்சனங்களையும், பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 2022 ஆம் ஆண்டு வரை அதிமுகவையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வந்த சவுக்கு சங்கர் தற்போது அவர்களுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.