சாதாரண டீ காபிக்கு குட் பாய் சொல்லுங்க!! இந்த மூலிகை டீ செய்து குடித்து பலன் பெறுங்கள்!!

Photo of author

By Gayathri

தேயிலையில் தயாரிக்கப்படும் டீ பெரும்பாலானோருக்கு விருப்ப பானமாக உள்ளது.இந்த சாதாரண டீயை விட மூலிகை பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்ட டீ குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வளரும் பிள்ளைகளுக்கு மூலிகை டீ செய்து குடிப்பதன் மூலம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முடியும்.

தேவையான பொருட்கள்:

1)சோம்பு
2)புதினா இலைகள்
3)தேன்

செய்முறை விளக்கம்:

உரலில் ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து இடித்த சோம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் நான்கு அல்லது ஐந்து புதினா இலைகளை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த மூலிகை தேநீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் ஜீரண சக்தி மேம்படும்.உணவு உட்கொண்ட பிறகு செரிமானப் பிரச்சனையை உணர்ந்தால் இந்த மூலிகை டீ செய்து பருகலாம்.

சாதாரண டீ,காபிக்கு பதில் இந்த மூலிகை டீ செய்து பருகி வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

1)எலுமிச்சை
2)தண்ணீர்
3)கலப்படம் இல்லாத தேன்

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கவும்.பிறகு பாதி எலுமிச்சம் பழத்தை எடுத்து வட்ட வடிவில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதை டீ பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.

பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி கலப்படம் இல்லாத தேன் கலந்து பருகவம்.சாதாரண டீ,காபிக்கு பதில் இந்த எலுமிச்சை தேநீர் பருகி வந்தால் உடல் ஆரோக்யமாக இருக்கும்.