நாம் உணவு உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் மலக் கழிவுகளை வெளியேற்றுவதும் முக்கியம்.நம் குடலில் அதிக மலம் தேங்கி இருப்பது நம் ஆரோக்கியத்திற்கு நாமே ஆப்பு வைப்பது போன்றது.எனவே தினமும் காலை நேரத்தில் மலத்தை வெளியேற்றுவது அவசியமான ஒன்றாக உள்ளது.சிலர் இரண்டு மூன்று தினங்கள் ஆனாலும் மலத்தை வெளியேற்ற மாட்டார்கள்.சிலருக்கு வாரக் கணக்கில் மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும்.
சிலர் மலத்தை கழிக்காமல் அடிக்கி வைத்து ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.நமது உடலில் தேங்கி இருக்கும் மலக் கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் இருந்தால் நாளடைவில் பைல்ஸ் பாதிப்பாக மாறிவிடும்.இதனால் அறுவை சிகிச்சை வரை செல்ல நேரிடும்.எனவே நாள்பட்ட மலக் கழிவுகளை அகற்ற இயற்கை வழிகளை தேர்ந்தெடுத்து பாலோ பண்ணுங்கள்.
குடல் கழிவுகளை அகற்றுவதில் பழங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையே நமக்கு எப்பொழுதும் வராது.அந்தவகையில் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும் பழங்கள் என்னென்னெ என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
1)பப்பாளி
தினமும் இரவில் ஒரு கீற்று பப்பாளி பழத்தை சாப்பிட்டால் அதிகாலை நேரத்தில் மலக் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.பப்பாளி பழம் செரிமானப் பிரச்சனையை சரி செய்வதோடு மலத்தை வெளியேற்றவும் உதவுகிறது.
2)ஆரஞ்சு
வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழத்தை உட்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கும்.ஆரஞ்சு பழத்தை சாறாக பருகினால் மலச்சிக்கல் வராமல் இருக்கும்.
3)ஆப்பிள்
நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் பழத்தை ஜூஸாக செய்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனையே ஏற்படாது.ஆப்பிள் சாப்பிடுவதால் குடல் இயக்கம் மேம்படும்.
4)பிளம்ஸ்
இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.
5)ஸ்ட்ராபெர்ரி
நார்ச்சத்து நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டால் வறண்ட மலம் இளகி வெளியேறும்.