விரைவில் குழந்தை பாக்கியம் பெற 108 முறை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!! இப்படி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

0
70
#image_title

விரைவில் குழந்தை பாக்கியம் பெற 108 முறை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!! இப்படி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

குழந்தை பாக்கியம் என்பது கடவுள் கொடுத்த வரம் என்பார்கள். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைத்து விடும். ஒரு சில தம்பதிக்கு காலத் தாமதம் ஆகும். அவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்படுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்:-

*பித்தளை தட்டு

*மஞ்சள், குங்குமம்

*வெற்றிலை

*அகல் விளக்கு

*நெய்

*திரி

பரிகாரம் செய்யும் முறை…

ஒரு பித்தளைத் தட்டில் மஞ்சள் குங்குமம் வைத்து அதன் மீது ஒரு வெற்றிலை வைக்கவும். அடுத்து ஒரு அகல் விளக்கில் மஞ்சள், குங்குமம் வைத்து வெற்றிலை மீது வைக்கவும்.

பின்னர் இந்த அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி “கர்ப்பரக்ஷாம்பிகை தேவி” யை மனதார நினைத்து குழந்தை வரம் வேண்டி தீபம் ஏற்ற வேண்டும்.

விளக்கிற்கு கீழ் வைத்துள்ள வெற்றிலையின் காம்பு நமக்கு வலது பக்கமாக இருக்க வேண்டும்.

விளக்கு ஏற்றிய உடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை 108 முறை உச்சரித்து பின் தூப தீபம் காட்டி மனதார வேண்டிக் கொள்ளவும்.

ஸ்லோகம்:

“ஓம் கர்ப்ப ரஷாம்பிகாயை ச வித்மஹே

மங்கள தேவதாயை ச தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத”

இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு, தினமும் காலை குளித்தவுடன் சொல்ல வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு சொல்ல வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.