அதிரடி முடிவை வெளியிட்ட SBI வங்கி!! 

Photo of author

By Parthipan K

எஸ்பிஐ தற்போது நிதி பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ஆக ரூ.8,931 கோடியை திரட்டும் வகையில் அதிரடியான முடிவை எடுத்துள்ளது.

இது தொடர்பாக எஸ்பிஐ வெளியே அறிக்கை  கூறியதாவது: முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான ஆலோசனைகளை நடத்துவதற்காக எஸ்பிஐ-இன் இயக்குனர்கள் கூட்டமானது அண்மையில் நடத்தப்பட்டது.

அதில் 89,310 நிதி பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ஆக ரூ. 8,931கோடியை திரட்டுவதற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

மேலும் இந்தக் கூட்டத்திலேயே, ஒவ்வொரு பக்கத்திற்கும் தலா ரூ. 10 லட்சமாக எஸ்பிஐ  நிர்ணயித்துள்ளது.

ஒவ்வொரு நிதி பத்திரத்தின் முதிர்ச்சி காலமும் 15 ஆண்டுகள் ஆகும் அதனுடைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.80 சதவீதமும் நிர்ணயித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் கூடுதல் சலுகையாக நிதி பத்திரங்கள் வெளியிட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேவை ஏற்பட்டால் அதன் முதிர்ச்சி காலம் முடிவடையும் முன்பே அந்தப் பத்திரத்தை மீட்டெடுக்கலாம் என்ற கூடுதல் விதிமுறையும் வழங்கியுள்ளது.

மேலும் முதிர்ச்சி காலம் முடியும் முன்பே நீதி பத்திரங்களை திரும்பப் பெற்றுக் கொண்டால் அதற்கான தொகையை முதலீட்டாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும் என்ற அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.