ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன்னுடைய ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்த முக்கிய விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதன் எத்தனை முறை ஏடிஎம் பயன்படுத்தப்பட வேண்டும். எவ்வளவு ரூபாய் ஏடிஎம்மில் இருந்து பெறுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது என்பது போன்று முக்கிய விஷயங்களில் மாற்றங்களை மேற்கொண்டு இருக்கிறது.
SBI மேற்கொண்டுள்ள புதிய ஏடிஎம் விதிமுறைகள் :-
✓ முக்கிய பண பரிவர்த்தனை வரம்புகள் – இவற்றில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பொறுத்து உங்களுடைய பரிவர்த்தனை வரம்பானது நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு கிளாசிக் டெபிட் கார்டு பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
✓ நாளொன்றுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் பொழுது அதற்கான otp வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கக்கூடிய மொபைல் எண்ணிற்கு வந்து சேரும்.
✓ மெட்ரோ நகரங்களில் ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்படும் பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
✓ ஏடிஎம் சேவை கட்டணமானது ரூ.21+ஜிஎஸ்டி என முடிவு செய்யப்பட்டுள்ளது.
✓ மினி ஸ்டேட்மெண்ட் பெறுவதற்கு sbi ஏடிஎம் மிஷின்கள் கட்டணம் இல்லை என்றாலும் மற்ற வங்கிகளின் ஏடிஎம் மிஷின்களில் மினி ஸ்டேட்மென்ட் பெறும் பொழுது அதற்கான கட்டணமாக ரூ.10+ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.