எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி வரும் காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த வங்கி சேவையை பெற முடியும் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கியானது. சமீபத்தில் 2 கட்டணமில்லா எண்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதன்மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற வங்கி சேவைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டணமில்லா எண்களின் அறிமுகம் காரணமாக, இனி வாடிக்கையாளர்களின் வங்கி சேவை எந்தவிதமான தடையுமில்லாமல் கிடைக்கும் என்கிறார்கள்.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக 18001234 மற்றும் 18002100 என்ற இலவச தொடர்பு எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன இதன்மூலமாக வாடிக்கையாளர்களுக்கு 44 விதமான சேவைகள் வழங்கப்படுகின்றன. எஸ்பிஐ வங்கி தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்கி சார்ந்த தங்களுடைய அனைத்து கலைகளுக்கும் இனி விடை கொடுத்துவிடுங்கள் எஸ்பிஐ சேவை மையங்களுக்கு அழைத்திடுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு இடத்திலிருந்தும், எந்த ஒரு சமயத்திலும், வங்கி சேவையை பெற முடியும் என்கிறது அந்த நிறுவனம்.
ஆவே வங்கி தேவைகளுக்காக அங்கிகளுக்கு நேரில் வந்து சிரமப்படும் நேரத்தை இது சேமிக்க கூடியதாகவும், தடையற்ற சேவைகளை வழங்க கூடியதாகவும், இருக்கும் என கருதப்படுகிறது.
எஸ்.பி.ஐ இணையதள சேவைகள் அல்லது ஆப் சேவைகள் போன்ற டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பில்லாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என சொல்லப்படுகிறது.
என்னென்ன சேவைகளை நீங்கள் பெற முடியும்?
எஸ்பிஐ கட்டணமில்லா எண்கள் மூலமாக எண்ணற்ற சேவைகளை நீங்கள் பெற முடியும். இந்த சேவையானது 24 மணி நேரமும் அனைத்து நிலைகளிலும் செயல்படக்கூடியது.
அதிலும் குறிப்பாக ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் இந்த சேவை செயல்பட்டு வரும். வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலுள்ள பேலன்ஸ் மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை இதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல ஏடிஎம் கார்டு பிளாக்கிங் சேவை மற்றும் கார்டு விடுவிப்பு, சேவை உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ளலாம். தங்களுக்கான செக்புக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ள நிலை தொடர்பாகவும் ஏதாவது காரணமாக, ஏடிஎம் கார்டு பிளாக் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கவும், இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.
மேலும் உங்களுடைய டெபாசிட் மற்றும் வங்கி கடன் அக்கவுண்ட் விவரங்களை இந்த கட்டணமில்லா எண்கள் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
இதர டோல் ஃப்ரீ எண்கள்
டோல் ஃப்ரீ எண் : 1800 11 2211
டோல் ஃப்ரீ எண் : 1800 425 3800
டோல் ஃப்ரீ எண் : 080 265 999 90
ஒருவேளை இந்த வங்கி சேவைகள் தங்களுக்கு திருப்தி வழங்கவில்லை என்றால் அது தொடர்பாக unhappy என 8008202020 என்ற எண்ணுக்கு தாங்கள் குறுஞ்செய்தி அனுப்ப முடியும்.