இந்த வருடத்திற்கான நீட் தேர்வு எப்போது நடைபெறும்? தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
100

எம்பிபிஎஸ், பிடிஎஸ், இன்றைய நிலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. வருடந்தோறும் மே மாதம் முதல் வாரத்தில் இந்தத் தேசிய தேர்வு முகமை சார்பாக இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதுமிருக்கின்ற தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு பெறும் மதிப்பெண்களடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில் ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி ஆரம்பமாகி மே மாதம் 20ஆம் தேதி வரையில் நடைபெறுவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், 20223 உள்ளிட்ட கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை காண நீட் தேர்வு வருக 17ஆம் தேதி நடைபெற உள்ள சூழ்நிலையில், தேர்வு ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதோடு ஒரே தேதியில் பல்வேறு தேர்வுகள் நடப்பதாக சமூக வலைதளங்களில் மாணவர்கள் பதிவிட்டிருந்தார்கள்.

நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று நாடு முழுவதுமிருந்து கோரிக்கைகள் வந்த நிலையில், தேசிய தேர்வு முகமே இது தொடர்பாக விளக்கம் வழங்கி இருக்கிறது.

திட்டமிட்டபடி ஜூலை மாதம் 15 ஆம் தேதி கியூட் தேர்வும், ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வும், ஜூலை மாதம் 21ஆம் தேதி ஜிமெயின் தேர்வும், நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக கூறியிருக்கிறது.