SBI வங்கி சேவைகள் இந்த 2 நாட்களில் நிறுத்தம்! வெளியானது அறிவிப்பு

0
100
SBI
SBI

SBI வங்கி சேவைகள் இந்த 2 நாட்களில் நிறுத்தம்! வெளியானது அறிவிப்பு

நாட்டின் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியானது அதன் டிஜிட்டல் சேவைகளில் பராமரிப்பு பணியை மேற்கொள்வதால் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அதன் டிஜிட்டல் சேவைகளை சில மணிநேரங்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனியார் வங்கிகளுக்கு இணையாக சேவையை வழங்குவதுடன் அதிக அளவிலான வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவ்வப்போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமல் வீட்டிலிருந்தே பல வகையான வங்கி சேவைகளை பெற்று கொள்ளும் வகையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது தவிர வயது முதிர்ந்தவர்களுக்கான சில சேவைகளையும் அவர்களின் வீடு தேடி சென்று கொடுத்து வருகிறது.

இந்நிலையில் வழக்கம் போல டிஜிட்டல் சேவைகளின் போது பயனர்களுக்கு ஏற்படும் சில பாதுகாப்பு சிக்கல்களை கருத்தில் கொண்டு அவற்றை தடுக்க பராமரிப்பு பணிகளை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக SBI வங்கியின் டிஜிட்டல் சேவைகள் சில மணி நேரங்கள் பாதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதாவது SBI வங்கியின் டிஜிட்டல் தளங்களான யோனோ, யோனோ லைட், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் யோனோ பிசினஸ் உள்ளிட்ட சேவைகள் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை, அதாவது இரவு 11.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.45 மணி வரை நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது

அதனால் வாடிக்கையாளர்கள் இந்த குறிப்பிட்ட நேரங்களில் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாது என்று SBI வங்கி ட்வீட் செய்துள்ளது. அதில் “ஒரு சிறந்த வங்கி அனுபவத்தை வழங்க பாடுபடுவதால் எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் எங்களுடன் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது.

இது தவிர புதிய வாடிக்கையாளர்களை டிஜிட்டல் மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிம் பைண்டிங் வசதியுடன், YONO மற்றும் YONO Lite சேவைகள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களின் சிம் வைத்திருக்கும் சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும் எனவும் அறிவித்துள்ளது.