SBI வாடிக்கையாளர்களே உங்கள் சேமிக்கு கணக்கில் இருந்து மாதந்தோறும் ரூ.295 காணாமல் போகிறதா? அப்போ இதை உடனே தெரிஞ்சிக்கோங்க!!

Photo of author

By Divya

SBI வாடிக்கையாளர்களே உங்கள் சேமிக்கு கணக்கில் இருந்து மாதந்தோறும் ரூ.295 காணாமல் போகிறதா? அப்போ இதை உடனே தெரிஞ்சிக்கோங்க!!

Divya

SBI வாடிக்கையாளர்களே உங்கள் சேமிக்கு கணக்கில் இருந்து மாதந்தோறும் ரூ.295 காணாமல் போகிறதா? அப்போ இதை உடனே தெரிஞ்சிக்கோங்க!!

இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) 16 ஆயிரம் கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கோடிக்கணக்கான இந்தியர்கள் கணக்கு வைத்திருக்கின்றனர்.

இந்த வங்கி ஹவ்சிங் லோன், கோல்டு லோன், பர்சனல் லோன், பிசினஸ் லோன், அக்ரிகல்ச்சர் லோன் என்று பல்வேறு கடன் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. அவ்வப்போது சலுகைகளையும், சிறப்பான சேவைகளையும் வழங்கி வருகிறது.

இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு வைத்திருக்கும் இருப்பிடத்தை பொறுத்து, மாதம் சராசரியாக ரூ.3000, ரூ.2000 மற்றும் ரூ.1000 குறைந்தபட்ச இருப்பு தொகையாக வைத்திருக்க வேண்டும் என்பது ரூல்ஸ்.

இந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து மாதம் தோறும் ரூ.295 ரூபாய் எந்த ஒரு குறுந்தகவலும் அனுப்பப்படாமல் கழிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் குவிந்த வண்ணம் இருந்தது.

எதற்காக ரூ.295 எடுக்கப்படுகிறது என்ற முறையான தகவல் தெரியவில்லை என்று வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கிற்கும், வங்கியின் இணைய முகவரிக்கும் தொடந்து புகார் அனுப்பி வந்தனர்.

இந்நிலையில் SBI வங்கி தரப்பில் இருந்து இது குறித்த முறையான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது SBI வாடிக்கையாளர்களாக நீங்கள் EMI முறையில் பொருட்கள் வாங்கினால்
அந்த EMI விவரங்களை National Automated Clearing House (NACH) என்ற பகுதி தொடர்ந்து கவனித்து வரும்.

வங்கி ரூல்ஸ் படி நீங்கள் EMI செலுத்த வேண்டிய தொகை எவ்வளவோ அதை அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே அதாவது முந்தின நாள் உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்க வேண்டும்.

இதை முறையாக பாலோ செய்யவில்லை என்றால் அந்த தனிப்பட்ட நபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.250 அபராதமாக வசூலிக்கப்படும். இந்த அபாரதத்திற்கு வாரியாக ரூ.45 என்று மொத்தம் ரூ.295 ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் இருந்து NACH எடுக்கும். எனவே உங்கள் வங்கி கணக்கில் இருந்து இவ்வாறு பணம் எடுக்கப்படக் கூடாது என்றால் உங்கள் EMI தொகையை கட்ட வேண்டிய முந்தின நாளே உங்கள் கணக்கில் போட்டு வைப்பது நல்லது.