சூதுகளும் சூழ்ச்சிகளும் இந்த அப்பாவி மக்களுக்கு தெரியாது! எங்களுக்குத் தான் தெரியும் திமுகவை சாடிய முன்னாள் அமைச்சர்!

0
131

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிமுக சார்பாக அவருக்கு தங்க கவசம் அனுபவிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கத்தை 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அந்த கட்சியில் ஏகப்பட்ட கூச்சல், குழப்பங்கள் ஏற்பட்டனர். முதலில் ஒன்றாக இணைந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தற்போது மீண்டும் அவர்களுக்குள் உண்டான மனக்கசப்பு காரணமாக இரு அணியாக பிரிந்துள்ளனர். ஆனால் கட்சியின் பல முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கும் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அதாவது இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்டோரி கடையை இந்த தங்க கவசத்தை யார் அணிவிப்பது? யார் இந்த தங்க கவசத்தை பெற்றுக் கொள்வது? என்று இருவருக்கும் இடையே மோதல் உருவானது.

ஆனால் இதில் நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதாவது இருவருக்கும் இந்த தங்க கவசத்திற்கு உரிமை கூற எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை. இதனை ராமநாதபுரம் வருவாய் ஆணையரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் மருது சகோதரர்களின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு அதிமுகவினர் இடையே பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு முதன் முதலில் அரசின் சார்பாக விழா நடத்தியவர் புரட்சித்தலைவி அம்மா, தற்போது சிவரக்கோட்டையில் மக்கள் கோரிக்கையை ஏற்று மருது பாண்டியர்கள் சிலை அமைக்க அரசாணை வழங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி ஆவார் என்று கூறியுள்ளார். மேலும் 13 1/2 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் மூன்று நாள் நடைபெறும் குருபூஜையில் தங்க கவசத்தை அதிமுக சார்பாக அனுப்பிப்பது தான் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் துரோகத்தின் காரணமாக அந்த தங்க கவசத்தை அவரின் திருவுருவத்திற்கு சாத்த தடை வந்து விடுமோ என்று மக்கள் அச்சம் கொண்டிருந்தார்கள். இதற்கு தடை உண்டாக்கிட சூழ்ச்சி செய்தார்கள், என்பதை அறிந்து தான் வங்கி கணக்கை முடக்க பார்க்கும் துரோகிகள் என்று தெரிந்த பின்பு நீதிமன்றத்திற்கு சென்று எடப்பாடி யார் தங்க கவசம் முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்த போது நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது.

அதாவது மாவட்ட வருவாய் அலுவலர் மூலமாக இந்த தங்க கவசம் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் மூலமாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு தங்க கவசம் சாத்திருக்கின்ற காட்சி தெ தென்மாவட்ட மக்களின் மனதில் உள்ளம் குளிர வைத்துள்ளது இதில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தவர்களுக்கு மரண அடி வழங்கும் விதத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி முயற்சிலேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுதான் சத்தியமான உண்மை. இது அதிமுக சொத்து, அம்மாவின் சொத்து இதை கழகப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் முறையிட்டபோது வங்கி வழங்க தயாராக இருக்கும்பொழுது அங்கே தடை ஏற்படுத்தினார்கள். அதன் பிறகு நீதிமன்ற ஆணையை பெற்று தங்க கவசம் வேண்டும் என்ற பொழுது அங்கேயும் தலையை உண்டாக்கி விட்டார்கள்.

தேவர் நினைவாலையை காப்பாளர்களிடம் முறையிட்ட போது அங்கேயும் சென்று தடையை ஏற்படுத்தினார்கள். நீங்கள் எத்தனை தடையை ஏற்படுத்தினாலும் தேவர் உங்களுக்கு ஆசி வழங்காத காரணத்தினால் தங்களால் கவசத்தை எடுக்க முடியவில்லை எடப்பாடியாருக்கு தேவரின் ஆசி இருப்பதால் அவர் முயற்சியில் தேவர் திருமேனியிலேயே தங்க கவசம் சாத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடியாருக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் அருளாசி இருந்த காரணத்தால் தான் தமிழகத்தில் முதலமைச்சராக நான்கரை ஆண்டு காலம் முழு ஆயுளாக இருந்தார். பன்னீர் செல்வத்திற்கு பதவி இல்லை என்ற காரணத்தினால் நீங்கள் செய்கின்ற சூதுகளையும் சூழ்ச்சிகளையும் நாங்கள் எதிர்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு மாமன்னர் மருது பாண்டியர்கள் ஆசியும் இருக்கிறது, தேவர் திருமகனார் ஆசியும் இருக்கிறது, மூக்கையா தேவர் ஆசியும் இருக்கிறது. ஆனால் விவாதம் செய்கிறார்கள் ஏன்? சூழ்ச்சிகளும் சூதுகளும் இந்த அப்பாவி மக்களுக்கு தெரியாது எங்களுக்குத் தான் தெரியும் என்று தெரிவித்துள்ளார் ஆர்.பி. உதயகுமார்.

நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன்னுக்கு வருவார், காளையார் கோவிலுக்கு வருவார், இந்த உசிலம்பட்டிக்கும் வருவார் அது நிச்சயமாக நடைபெறும். அந்த நாள் தென் தமிழகத்தில் பொன் நாளாக இருக்கும். வருகின்ற 30ஆம் தேதி சென்னை நந்தனத்தில் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட தெய்வத்திருமகன் வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கத்தை செலுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்துள்ளார் ஆர். பி. உதயகுமார்

Previous articleமுத்துராமலிங்கத்தேவர் குருபூஜை! விழாவில் கலந்து கொள்ள வரும் வாகனங்களின் வழித்தடங்கள் இதுதான்!
Next articleஇந்தி திணிப்பு கூடாது! மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய கட்சி தலைவர்கள்!