மிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா? 

 

மிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா?

 

இன்று ஒரு சிறந்த நடிகராக இருக்கும் அருண் விஜய் ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபிக்க கடினமாக உழைத்தார். இப்போது இவர் மேற்கு இந்தியாவில் சிறந்த உடம்பை கொண்ட வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மோனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்திற்காக தமிழில் சிறந்த வில்லன் என்ற விருதுகளை அதிகம் பெற்றுள்ளார். அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் அருண் விஜய் இவர் தற்போது தனது மச்சான் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூலை 1ஆம் தேதி திரையுலகில் வெளியானது.

கதையை படமாக இயக்கம் கில்லாடி ஹரி யானை படத்தை மிகவும் அருமையாக இயக்கி இருந்ததால் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு  பெற்று வருகிறது. படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 16 கோடிகளும் தமிழகத்தில் மட்டும் 12 கோடிகளும் வசூல் செய்துள்ளது.

படம் வெளியாகி ஏழு நாட்கள் ஆகியும் இன்னும் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டே இருக்கின்றார்கள். யானை படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு வைத்து பார்க்கையில் அருண் விஜய் சினிமா இயக்கத்தில் இந்த படம் வசூல் ரீதியில் அவருக்கு பெரிய சாதனையை படைத்து கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி யானை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தால் நடிகர் அருண் விஜய் மிகவும் சோகத்தில் இருக்கிறாராம். ஏனென்றால் இந்த படத்திற்குப் பிறகு அவர் நடித்துள்ள பார்டர், பாக்ஸர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என நம்பி இருந்தாராம். ஆனால் தற்போது எவ்வளவு முயற்சி செய்தியும் இந்த படங்களை ரெடி செய்ய முடியவில்லை. இந்த படங்களுக்கு ஏதாவது ஒரு தடங்கல் ரிலீஸ் செய்ய வந்து கொண்டே இருக்கிறதாம். அந்த வகையில் யானை படம் நல்ல வரவேற்பு பெற்று வந்தாலும் அருண் விஜய் மட்டும் மிகவும் சோகமாக இருக்கிறாராம்.

Leave a Comment