இந்தியா அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை வெளியீடு!

0
32
#image_title

இந்தியா அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை வெளியீடு!

உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி விளையாடவுள்ள போட்டிகளின் அட்டவணை தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.

இந்தியாவில் தற்பொழுது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து அணிகள் விளையாடி வருகின்றது.

அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இந்த உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அனைத்து அணிகளும் அரையிறுதி சுற்றுக்கள் நுழைந்து இறுதிப் போட்டிக்கு சென்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் இந்திய அணி உலகக் கோப்பை தொடர்பு முடிந்த பிறகு விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணை தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.

உலகக் கோப்பை தொடர்பு முடிந்தவுடன் இந்தியா அணி முதலில் இங்கிலாந்து அணியுடனான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. அதன்படி இங்கிலாந்து மற்றும் இந்தியா விளையாடும் டி20 தொடர் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. மேலும் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ம் தேதி தொடங்குகிறது.

அதே போல உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியா அணியும் இந்தியா அணியும் மூன்று டி20 பெட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி 21ம் தேதியும், ஒரு நாள் தொடர் டிசம்பர் 28ம் தேதியும், டி20 தொடர் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதியும் தொடங்குகின்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடும் தொடருக்கான அட்டவனை…

* முதல் டி20 போட்டி டிசம்பர் 6ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகின்றது.

* இரண்டாவது டி20 போட்டி டிசம்பர் 9ம் தேதி இரவு 7 மணிக்கு மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றது.

* மூன்றாவது டி20 போட்டி டிசம்பர் 10ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகின்றது.

* இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மேதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய் ஸ்டேடியத்தில் காலை 9.30 மணிக்கு டிசம்பர் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் விளையாடும் தொடருக்கான அட்டவணை…

* இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் காலை 9.30 மணிக்கு டிசம்பர் மாதம் 21 முதல் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

* அதே போல இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் மூன்று ஒருநாள் போட்டிகளும் மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகளும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகின்றது.

* அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 28ம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறுகின்றது. மூன்றாவது ஒருநாள் போட்டி 2024ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி நடைபெறவுள்ளது.

* இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் டி20 தொடரின் மூன்று டி போட்டிகளும் நவி மும்பையில் உள்ள டிஒய் பட்டில் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

* அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் டி20 தொடரின் முதல் டி20 போட்டி ஜனவரி 5ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜனவரி 7ம் தேதியும் மூன்றாவது டி20 போட்டி ஜனவரி 9ம் தேதியும் நடைபெறவுள்ளது.