பல வருடங்களுக்கு பிறகு நாளை வருகிறார் சேனாதிபதி! இந்தியன் 2 படத்தின் அப்டேட் பற்றி படக்குழு அறிவிப்பு!!

0
31
#image_title

பல வருடங்களுக்கு பிறகு நாளை வருகிறார் சேனாதிபதி! இந்தியன் 2 படத்தின் அப்டேட் பற்றி படக்குழு அறிவிப்பு!!

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் குறித்த அப்டேட் நாளை(அக்டோபர்29) வெளியாகும் என்று படக்குழு தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996ம் ஆண்டு இந்தியன் திரைப்படம் வெளியானது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் எடுக்கவுள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து இந்தியன் 2 திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. மேலும் நடிகர்கள் பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்ததை அடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்திற்கான டப்பிங்கை தொடங்கியுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை பற்றி முக்கிய அறிவிப்பை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

அதாவது நாளை(அக்டோபர்29) காலை 11 மணிக்கு இந்தியன் 2 திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகும் என்று கூறி ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ரிசீவ்டு(Received) காபி சேனாதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.