பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான உதவித்தொகை! நாளையே கடைசி நாள் உடனே விண்ணப்பங்களை இங்கு சமர்ப்பிக்க வேண்டும்!
நாடு முழுவதும் ஐஐடி மற்றும் ஐ ஐ எம், ஐ ஐ டி,என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழங்களில் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவிகள் பட்டப்படிப்பு,பட்டம் மேற்படிப்பு படித்தால் அரசு சார்பில் ரூ இரண்டு லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகையை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும்.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம்.மேலும் இந்த விண்ணப்பத்தை அரசு அதிகாரபூர்வ இணையதளமான https://bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் இந்த விண்ணப்பத்தை அனுப்ப நாளையே கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உடனடியாக அவரவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.