தமிழக சட்டப்பேரவையில் தற்பொழுது மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. இந்த கூட்டத்தொடரில் தினந்தோறும் துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை தொடர்பான கலந்துரையாடலின் பொழுது தமிழ் மொழி தாய்நாடு என பற்று கொண்ட தமிழறிஞர்களுக்கு ஒவ்வொரு திங்கள் தோறும் வழங்கப்படக்கூடிய உதவித்தொகை இணை உயர்த்தி கொடுக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி,
✓ தமிழ் அறிஞர்கள் – 4500 ரூபாயிலிருந்து 7500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
✓ அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் – 3,500 லிருந்து 7500 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது
✓ எல்லைக் காவலர்கள் – 5500 இல் இருந்து 7500 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதற்காக தமிழக அரசு தரப்பில் இருந்து தொடர் செலவினமாக 3,90,60,000 ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் தமிழுக்காக தொண்டாற்ற கூடிய அகவை முன் இருந்த தமிழறிஞர்களை ஒவ்வொரு ஆண்டு 100 வீதம் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி 150 என அகவை உதிர்ந்த தமிழறிஞர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமென அவர்களுடைய எண்ணிக்கையை தமிழக அரசு உயர்த்தி இருக்கிறது. இதற்காக 48 லட்சம் கூடுதலாக ஒதுக்கப்பட்ட இருப்பதாகவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.