மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியர் வெளியட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பள்ளியில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு 2022-2023 நிதியாண்டிற்காக உதவித்தொகை குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுத்தோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உடல் உணமுற்ற காரணத்தினால் இவர்கள் கல்வி கற்கமால் வீட்டிலேயே முடக்கி கிடக்கிறனர். இவர்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிறனர்.
மேலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவிகளுக்காக வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்படும் . மேலும் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவிகள் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற மாற்று திறனுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிக்காக தனித்துவ வாய்ந்த அடையாள அட்டையும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். மேலும் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் முந்தைய கல்வி ஆண்டில் இறுதி தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்த அறிவிப்பின் படி ஆண்டுத்தோறும் கல்வி உதவி தொகையாக 1 முதல் 5ம் வகுப்பு வரை ரூ.1000 தொகையும் 6 முதல் 8 வகுப்பு வரை ரூ.3,000 தொகையையும் 9 முதல் 12ம் வகுப்பு வரை 4 தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொழில் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4000 உதவித்தொகையும் இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ. 6000 தொகையும் முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7000 உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல் பார்வையற்ற மாணவ மாணவிகளுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் தொழிற்பயிற்சி மட்டும் பட்ட படிப்பிற்கு ரூ.30,000 வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இளங்கலை பட்டப்படிப்பு மாணவ மாணவிகளுக்கு ரூ 5000 முதுகலை பட்ட படிப்பு மாணவ மாணவியருக்கு ரூ.6000 வாசிப்பாளர் தொகையாக வழங்கப்படுகிறது.
மேலும் வேறு எந்த துறையிலும் உதவித்தொகை பெற்று இருக்க கூடாது. இந்த உதவித்தொகை பெற தலைமையாசிரியர், கல்லூரி, முதலமைச்சர் ஆகியோர் வழக்குச் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படங்களை போன்றவற்றுடன் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தளத்திற்கு அரை எண் 17 இல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கொடுத்து வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.