பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, 100% ஊழியர்களுக்கு அனுமதி! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Photo of author

By Parthipan K

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, 100% ஊழியர்களுக்கு அனுமதி! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து பரவத் தொடங்கியது. அதன்படி, இந்தியாவில், கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.

அதன்பின்னர், நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பரவல் வேகமெடுத்தது. நாடு முழுவதும் இதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில், இதன் பாதிப்பு மிகவும் மோசமாக இருந்தது. இதனையடுத்து டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. மேலும், பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அரசு மற்றும் தனியார் அலுவகலங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஒமைக்ரானால் ஏற்பட்ட மூன்றாவது அலையின் பாதிப்பு சமீப நாட்களாக நாடு முழுவதும் குறையத் தொடங்கியுள்ளது. அதேபோல், தலைநகர் டெல்லியிலும் தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஜனவரி மாத இறுதியில், வார இறுதி ஊரடங்கை நீக்கியது.

இந்நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மைக் குழு, துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, வருகிற திங்கள்கிழமை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது. எனினும், தற்போதைய சூழலில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்களையும் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்களைத் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கார்களில் தனியாக பயணிப்போர் முகக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டத் தேவையில்லை என தெரிவித்துள்ளது.