வங்கக்கடலில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை இது வருகிறது. இதனால் தொடர்ந்து 3 வது நாளாக இன்றும் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள் :-
✓ திருநெல்வேலி – பள்ளி மற்றும் கல்லூரிகள்
✓ தென்காசி – பள்ளி மற்றும் கல்லூரிகள்
✓ தூத்துக்குடி – பள்ளி மற்றும் கல்லூரிகள்
✓ விழுப்புரம் – பள்ளிகளுக்கு மட்டும்
✓ திருச்சி – பள்ளிகளுக்கு மட்டும்
✓ தேனி – பள்ளிகளுக்கு மட்டும்
மேலும், கனமழை காரணமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பு :-
வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு நோக்கி அரபிக்கடல் பக்கம் நகர்ந்து வருகிறது. இது கடந்து செல்லும் பாதை முழுவதும் மழையை பொழிந்து சென்றிருக்கிறது. இடையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுவடைந்ததால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழையை பெய்து தள்ளியது. இன்றும் நெல்லை, தென்காசியில் கனமழை பெய்து வருகிறது.