வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளி பேருந்து! மனதை பதறவைக்கும் வீடியோ!
மக்களுக்கும் இரண்டு வருடங்களாக தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து வருகிறது. முதலில் கருணா என்ற தொற்று சீன நாட்டிலிருந்து உருவாகி அனைத்து நாடுகளிலும் பரவியது. தொற்று அண்டை நாடுகள் அனைத்திற்கும் பெரும் தாக்கத்தை கொடுத்தது. இந்த வகையில் இந்தியாவும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு தற்போது வரை போராடி வருகிறது. ஆனால் அத்தோடு வருடத்திற்கு வருடம் உருமாறி மக்களுக்கு பெரும் ஆபத்தையே விளைவிக்கிறது. தற்போதுதான் மக்கள் இரண்டாம் அலை முடிந்து நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பினர்.
அதற்குள்ளேயே என்றுமில்லாத அளவிற்கு இம்முறை பருவமழை பெய்து கொட்டி தீர்த்தது. அதன் விளைவாக காய்கறி என அனைத்தும் விலைவாசி உயர்ந்தது. பாமர மக்கள் இந்த விலையை கண்டு பெருமளவு அச்சப்பட்டனர். அதுமட்டுமின்றி இந்த பருவ மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி குளம் குட்டை போன்றவை நிரம்பி வழிந்தது. அவ்வாறு நிரம்பிய இதில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கில் மக்கள் அடித்துச் செல்லப்பட்ட பலர் உயிரை இழந்தனர்.
அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செங்கையாமங்களம் என்ற கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியின் பேருந்து வழக்கம்போல் மாணவர்களில் இறக்குவதற்கு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது செங்கையாமங்களம் பரளையாறு வழியே பாலத்தை கடக்கும் போது யாரும் எதிர்பார்க்க முடியா நேரத்தில் காட்டாற்று வெள்ளத்தால் பேருந்து அடித்து செல்லப்பட்டது. அந்நேரத்தில் பேருந்தில் இருந்த மாணவர்கள் அக்கம் பக்கத்தினரால் மிக பத்திரமாக மீட்கப்பட்டனர். யாருக்கும் எந்தவித விபரீதமும் ஏற்படவில்லை.
மேலும் அவ்வழியே சென்ற மக்கள் அந்தப் பேருந்து ஓட்டுநருக்கு உதவி புரிந்தனர். பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த காட்டாற்று வெள்ளத்தில் இருந்து பேருந்தை மீட்டெடுத்தனர். இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் மாணவர்கள் யாருக்கும் எந்தவித விபரீதமும் நடைபெறவில்லை என மக்கள் கூறி கடவுளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.