கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விபரங்கள்

0
145

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விபரங்கள்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து நேற்று மாலையும் இன்று அதிகாலையும் பள்ளி கல்லூரிகள் குறித்த அறிவிப்பை ஒருசில மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்

அதன்படி சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோல் கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இன்று நடைபெறுவதாக இருந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் அறிவித்துள்ளனர்

மேலும் இன்று நடைபெறுவதாக இருந்த மின்வாரிய துறையின் கேங்மேன் நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மின்வாரியத் துறை அறிவித்துள்ளது.

Previous articleதிமுக ஐடி விங்கை அலறவிட்ட பாமகவினர்! அதிர்ச்சியில் திமுக தலைமை
Next articleகனமழையால் வீடுகள் இடிந்து 10 பேர் பலி: அதிர்ச்சி தகவல்